உன்னதப்பாட்டு 2:1-17
2 “சமவெளியில்* மலர்ந்த வெறும் காட்டு மலர்* நான்.பள்ளத்தாக்கில் பூத்த சாதாரண* பூ+ நான்.”
2 “முட்செடிகள் நடுவில் விரிந்த லில்லிப் பூவைப் போலஇளம் பெண்கள் நடுவில் இருக்கிறாள் என் காதலி.”
3 “காட்டு மரங்கள் மத்தியில் நிற்கும் ஆப்பிள் மரம்போல்இளம் ஆண்கள் மத்தியில் இருக்கிறார் என் காதலன்.
அவருடைய நிழலில் உட்கார ஏங்கித் தவிக்கிறேன்.அவர் தரும் பழங்கள் என் வாயில் தித்திக்கின்றன.
4 விருந்து வீட்டுக்கு அவர் என்னை அழைத்து வந்தார்.அவருடைய நேசத்தைக் கொடிபோல் என்மேல் பறக்கவிட்டார்.
5 நான் காதல் நோயால் தவிக்கிறேன்.உலர்ந்த திராட்சை அடைகள் கொடுத்து எனக்குப் புத்துணர்ச்சியூட்டுங்கள்.+ஆப்பிள் பழங்கள் தந்து எனக்குத் தெம்பூட்டுங்கள்.
6 அவருடைய இடது கை என் தலையின் கீழ் இருக்கட்டும்.அவருடைய வலது கை என்னை அணைக்கட்டும்.+
7 எருசலேம் மகள்களே, கலைமான்கள்மேல் ஆணையிட்டுக் கொடுங்கள்!காட்டில் திரியும் பெண் மான்கள்மேல்+ ஆணையிட்டுக் கொடுங்கள்!
காதல் ஆசை எனக்குள் தானாகவே மலரும்வரை அதை நீங்கள் தட்டியெழுப்பக் கூடாது.+
8 என் காதலனின் சத்தம் கேட்கிறது!
இதோ! அவர் வருகிறார்.மலைகளில் ஏறி, குன்றுகளில் துள்ளிக்குதித்து வருகிறார்.
9 என் காதலன் ஒரு கலைமான்!* அவர் ஒரு மான்குட்டி!+
இதோ! அங்கே இருக்கிறார், சுவருக்குப் பின்னால் நிற்கிறார்.ஜன்னல்கள் வழியாக எட்டிப் பார்க்கிறார்.ஜன்னலின் தட்டி வழியாக உற்றுப் பார்க்கிறார்.
10 என் காதலன் என்னிடம் சொல்கிறார்:
‘என் காதலியே, எழுந்து வா.என் அழகியே, என்னோடு வா.
11 இதோ! மழைக்காலம்* முடிந்துவிட்டது.
அடைமழையும் அடங்கிவிட்டது.
12 ஊரெங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.+திராட்சைக் கிளைகளைக் கத்தரிக்கும் காலம் வந்துவிட்டது.+காட்டுப் புறாவின் பாடல் நம் ஊரில் கேட்கிறது.+
13 அத்தி மரத்தில் முதல் பழங்கள் பழுக்க ஆரம்பித்துவிட்டன.+திராட்சைக் கொடியில் பூக்கள் பூத்து வாசம் வீசுகின்றன.
என் காதலியே, எழுந்து வா.
என் அழகியே, என்னோடு வா.
14 என் புறாவே, பாறை மறைவிலிருந்து+ என்னைப் பார்.செங்குத்தான பாறை இடுக்கிலிருந்து என்னைப் பார்.உன் அழகிய முகம்+ பார்க்க ஆசைப்படுகிறேன்,உன் இனிய குரல் கேட்கத் துடிக்கிறேன்.’”+
15 “எங்கள் திராட்சைத் தோட்டங்கள் பூத்துவிட்டன.குள்ளநரிக் குட்டிகள் அவற்றை நாசமாக்குகின்றன.அவற்றைப் பிடித்துக்கொடுங்கள்.”
16 “என் காதலன் எனக்குச் சொந்தம், நான் அவருக்குச் சொந்தம்.+
என்னவர் லில்லிப் பூக்களின் நடுவே ஆடுகளை மேய்க்கிறார்.+
17 என் காதலனே, தென்றல் வீசுவதற்குள், நிழல் மறைவதற்குள் வாருங்கள்.நம்மைப் பிரித்து நிற்கும் மலைகளில்* துள்ளி வருகிற கலைமான்+ போலவும்,மான்குட்டி போலவும் துள்ளி வாருங்கள்.”+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “கடற்கரைச் சமவெளியில்.”
^ நே.மொ., “குங்குமப்பூ.”
^ நே.மொ., “லில்லி.”
^ வே.வா., “நவ்வி மான்.”
^ வே.வா., “குளிர்காலம்.”
^ அல்லது, “பிளவுபட்ட மலைகளில்.”