உன்னதப்பாட்டு 8:1-14

8  “நீங்கள் என் தாயிடம் பால் குடித்த என் சகோதரனாக இருந்திருக்கக் கூடாதா?இருந்திருந்தால், வீட்டுக்கு வெளியே பார்க்கும்போதுகூட உங்களுக்கு முத்தம் கொடுப்பேனே.+ யாரும் என்னைக் கேவலமாகப் பேச மாட்டார்களே.   நான் உங்களை அழைத்து வருவேன்.எனக்குக் கற்றுக்கொடுத்த தாயின் வீட்டுக்குள் அழைத்து வருவேன்.+நறுமணப் பொருள்கள் கலந்த திராட்சமதுவைக் குடிக்கக் கொடுப்பேன். மாதுளை பழச்சாறு தருவேன்.   அவருடைய இடது கை என் தலையின் கீழ் இருக்கும்.அவருடைய வலது கை என்னை அணைத்துக்கொள்ளும்.+   எருசலேம் மகள்களே, எனக்கு ஆணையிட்டுக் கொடுங்கள். காதல் ஆசை எனக்குள் தானாகவே மலரும்வரை அதை நீங்கள் தட்டியெழுப்பக் கூடாது.”+   “வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்?”காதலன்மேல் சாய்ந்தபடி வருகிற இவள் யார்? “ஆப்பிள் மரத்தடியில் உங்களை எழுப்பினேன். அங்குதான் உங்கள் தாய் பிரசவ வலியில் துடித்தாள். கர்ப்ப வேதனைப்பட்டு உங்களைப் பெற்றெடுத்தாள்.   உங்கள் இதயத்தில் என்னை முத்திரையாகப் பதியுங்கள்.உங்கள் கையில் என்னை முத்திரையாகக் குத்துங்கள்.அன்பு, மரணத்தைப் போல் வலிமையானது.+இணைபிரியாத* நேசம், கல்லறையைப் போல் விடாப்பிடியானது. அன்பின் ஜுவாலை கொழுந்துவிட்டு எரிகிற தீ ஜுவாலை, அது “யா”வின்* ஜுவாலை.+   பாய்ந்து வரும் வெள்ளம்கூட அன்பின் ஜுவாலையை அணைக்க முடியாது.+ஓடிவரும் நதிகள்கூட அன்பை அடித்துச் செல்ல முடியாது.+ ஒருவன் அன்பை விலைக்கு வாங்க தன் செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும்,அந்தச் செல்வம் அடியோடு ஒதுக்கித்தள்ளப்படும்.”*   “நமக்கு ஒரு தங்கை இருக்கிறாள்.+அவளுக்கு மார்புகள் இல்லை. அவளை யாராவது பெண் கேட்டு வரும்போதுநாம் என்ன செய்வோம்?”   “அவள் ஒரு மதிலாக இருந்தால்,அவள்மேல் வெள்ளிக் கொத்தளம் அமைப்போம்.அவள் ஒரு கதவாக இருந்தால்,அவள்மேல் தேவதாரு பலகை அடிப்போம்.” 10  “நான் மதில்தான்,என் மார்புகள் கோபுரம்போல் இருக்கின்றன. என் மனதில் அமைதி குடிகொண்டிருக்கிறது,என்னவர் அதை அறிந்திருக்கிறார். 11  பாகால்-ஆமோனில் சாலொமோன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்திருந்தார்.+ தோட்டக்காரர்களிடம் அதை ஒப்படைத்தார். அதில் விளையும் பழங்களுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகள் தருவார்கள். 12  எனக்கென்று சொந்தமாக ஒரு திராட்சைத் தோட்டம் இருக்கிறது. சாலொமோன் ராஜாவே, ஆயிரம் வெள்ளிக் காசுகள் உங்களிடமே இருக்கட்டும்.இருநூறு வெள்ளிக் காசுகள் அந்தத் தோட்டக்காரர்களிடமே இருக்கட்டும்.” 13  “தோட்டங்களில் தங்கியிருப்பவளே,+உன் குரல் கேட்க நண்பர்கள் காத்திருக்கிறார்கள். நானும் உன் குரல் கேட்க ஏங்குகிறேன்.”+ 14  “என் அன்பே, சீக்கிரம் வாருங்கள்.நறுமணச் செடிகள் மண்டிக்கிடக்கிற மலைகளிலேதுள்ளியோடுகிற கலைமான்* போலவும்,+மான்குட்டி போலவும் துள்ளியோடி வாருங்கள்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “உண்மையான.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
அல்லது, “அவன் அடியோடு ஒதுக்கித்தள்ளப்படுவான்.”
வே.வா., “நவ்வி மான்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா