ஏசாயா 3:1-26
3 உண்மை எஜமானாகிய பரலோகப் படைகளின் யெகோவா,எருசலேம் ஜனங்களும் யூதா ஜனங்களும் நம்பியிருக்கிற எல்லாவற்றையும் அழிப்பார்.அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காதபடி செய்துவிடுவார்.+
2 அவர்கள் நம்பியிருக்கிற பலசாலியையும், போர்வீரனையும்,நீதிபதியையும், தீர்க்கதரிசியையும்,+ குறிசொல்கிறவனையும், பெரியவரையும்,*
3 ஐம்பது பேருக்குத் தலைவனையும்,+ முக்கியப் பிரமுகரையும், ஆலோசகரையும்,திறமைவாய்ந்த மந்திரவாதியையும், மாயவித்தை நிபுணரையும் அழித்துவிடுவார்.+
4 சிறுவர்களை அவர்களுடைய தலைவர்களாக்குவார்.அலைபாயும் மனம் உள்ளவர்கள்* அவர்களை ஆட்சி செய்வார்கள்.
5 ஜனங்கள் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்துவார்கள்.அடக்கி ஒடுக்குவார்கள்.+
சிறுவர்கள் பெரியவர்களைத் தாக்குவார்கள்.சாதாரண ஆட்கள் மதிப்புக்குரியவர்களை எதிர்த்துப் பேசுவார்கள்.+
6 ஒவ்வொருவனும் தன் அப்பாவின் வீட்டிலுள்ள சகோதரனைப் பார்த்து,
“உன்னிடம் சால்வை இருக்கிறது; அதனால் நீ எங்கள் தலைவனாக இரு.
பாழாய்க் கிடக்கிற இந்த இடத்தை ஆட்சி செய்” என்று சொல்வான்.
7 ஆனால் அவன் அதற்குச் சம்மதிக்காமல்,“என்னால் உங்கள் காயத்துக்குக் கட்டுப் போட முடியாது.
என் வீட்டில் சாப்பாடும் இல்லை, துணிமணியும் இல்லை.
அப்படியிருக்கும்போது, நான் எப்படி ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பேன்?” என்று சொல்வான்.
8 எருசலேம் அழிந்துவிட்டது.யூதா நாசமாகிவிட்டது.ஜனங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காததையே பேசுகிறார்கள், செய்கிறார்கள்.அவருடைய மகிமையான கண்களுக்கு முன்னாலேயே அவர் பேச்சை மீறி நடக்கிறார்கள்.+
9 அவர்களுடைய முகபாவமே அவர்களைக் காட்டிக்கொடுக்கிறது.சோதோம் ஜனங்களைப் போலத் தங்கள் பாவங்களை வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.+அதை மறைக்கக்கூட நினைப்பதில்லை.
அவர்கள் கதி அவ்வளவுதான்! அவர்களே அவர்களுக்கு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள்.
10 நீதிமான்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.அவர்கள் நல்லது செய்வதால் நல்லதை அனுபவிப்பார்கள்.+
11 ஆனால், கெட்டவன் ஆபத்தில் சிக்குவான்.
அவன் என்ன செய்தானோ அதுவே அவனுக்குச் செய்யப்படும்.கடைசியில் அழிந்துபோவான்.
12 வேலை வாங்குகிறவர்கள் என் ஜனங்களைச் சக்கையாகப் பிழிகிறார்கள்.பெண்கள் அவர்களை ஆட்சி செய்கிறார்கள்.
என் ஜனங்களே, உங்கள் தலைவர்கள் உங்களை அலைய விடுகிறார்கள்.வழி தெரியாமல் திண்டாட வைக்கிறார்கள்.+
13 யெகோவா அவர்களுக்குத் தீர்ப்பு கொடுக்க வந்துவிட்டார்.அவர்களுக்குத் தண்டனை கொடுக்கத் தயாராகிவிட்டார்.
14 ஜனங்களின் அதிபதிகளையும் பெரியோர்களையும்* யெகோவா தண்டிப்பார்.
“நீங்கள் திராட்சைத் தோட்டத்தைக் கொளுத்திவிட்டீர்கள்.ஏழைகளிடம் கொள்ளையடித்த பொருள்களை உங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்.+
15 உங்களுக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் ஜனங்களைப் பாடுபடுத்துவீர்கள்?எவ்வளவு தைரியம் இருந்தால் ஏழைகளை ஏறி மிதிப்பீர்கள்?”+ என்று உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா கேட்கிறார்.
16 யெகோவா சொல்வது இதுதான்: “சீயோனில் உள்ள பெண்கள் சரியான அகங்காரிகள்.தலையை நிமிர்த்திக்கொண்டு சுற்றித் திரிகிறார்கள்.கண்களால் காதல் வலை வீசுகிறார்கள்.கொலுசு சத்தம் கேட்கும்படி தளுக்கிக் குலுக்கி நடக்கிறார்கள்.
17 யெகோவா அந்தப் பெண்களின் தலையில் புண்கள் வரும்படி செய்வார்.அவர்களுடைய தலையை யெகோவா வழுக்கையாக்குவார்.+
18 அந்த நாளில் யெகோவா அவர்களுடைய அழகான வளையல்களையும்,கூந்தல் ஆபரணங்களையும்,* பிறை வடிவ ஆபரணங்களையும்,+
19 தொங்கட்டான்களையும், காப்புகளையும், முக்காடுகளையும்,
20 தலை அணிகலன்களையும், கொலுசுகளையும், மார்க்கச்சைகளையும்,வாசனைத் தைலக் குப்பிகளையும், தாயத்துகளையும்,*
21 மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
22 பட்டாடைகளையும், மேலாடைகளையும், சால்வைகளையும், கைப் பைகளையும்,
23 கைக் கண்ணாடிகளையும்,+ நாரிழை உடைகளையும்,*தலைப்பாகைகளையும், வலைத்துணிகளையும் பிடுங்கிப்போடுவார்.
24 அவர்களுடைய பரிமளத் தைலம் வாசனையாக+ இருக்காது, நாற்றமாகத்தான் இருக்கும்.தலையில் கூந்தல் இருக்காது, வழுக்கைதான் இருக்கும்.+இடுப்பில் வார் இருக்காது, கயிறுதான் இருக்கும்.ஆடம்பரமான உடைக்குப் பதிலாகத் துக்கத் துணியைத்தான்* அவர்கள் உடுத்துவார்கள்.+அவர்களுக்கு அழகு இருக்காது, சூட்டுத் தழும்புதான் இருக்கும்.
25 ஆண்கள் வெட்டிக் கொல்லப்படுவார்கள்.வீரர்கள் போர்க்களத்தில் செத்துப்போவார்கள்.+
26 சீயோனின் வாசல்கள் அழுது புலம்பும்.+அவள் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு சோகத்தில் உட்கார்ந்திருப்பாள்.”+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “மூப்பரையும்.”
^ வே.வா., “நிலையான புத்தி இல்லாதவர்கள்.”
^ வே.வா., “மூப்பர்களையும்.”
^ அதாவது, “ஜடைபில்லைகளையும்.”
^ வே.வா., “சங்கு வடிவ ஆபரணங்களையும்.”
^ வே.வா., “லினன் உள்ளாடைகளையும்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.