சகரியா 7:1-14

7  தரியு ராஜா ஆட்சி செய்த நான்காம் வருஷம், ஒன்பதாம் மாதமாகிய கிஸ்லே* மாதம், நான்காம் நாள் சகரியாவுக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.+  பெத்தேல் நகரத்தில் இருந்தவர்கள், யெகோவாவின் கருணையைக் கேட்டுக் கெஞ்சுவதற்காக சரேத்சேரையும் ரெகெம்-மெலேகையும் அவருடைய ஆட்களையும் அனுப்பினார்கள்.  அவர்களைப் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தில் சேவை செய்கிற குருமார்களிடமும் தீர்க்கதரிசிகளிடமும் அனுப்பி, “இத்தனை வருஷங்களாக நாங்கள்* செய்தது போல இந்த வருஷமும் ஐந்தாம் மாதத்தில்+ சாப்பிடாமல் அழுது புலம்ப வேண்டுமா?” என்று கேட்கச் சொன்னார்கள்.  பரலோகப் படைகளின் யெகோவாவிடமிருந்து மறுபடியும் எனக்குச் செய்தி கிடைத்தது; அவர் என்னிடம்,  “தேசத்திலுள்ள எல்லா ஜனங்களிடமும் குருமார்களிடமும் இப்படிக் கேள்: ‘70 வருஷங்களாக+ ஐந்தாம் மாதமும் ஏழாம் மாதமும்+ நீங்கள் சாப்பிடாமல், புலம்பி அழுதீர்களே, எனக்காகவா அப்படிச் செய்தீர்கள்?  நீங்கள் சாப்பிட்டபோதும் எனக்காகவா சாப்பிட்டீர்கள்? குடித்தபோதும் எனக்காகவா குடித்தீர்கள்? எல்லாவற்றையும் உங்களுக்காகத்தானே செய்தீர்கள்?  நீங்கள் எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் நிம்மதியாகக் குடியிருந்தபோதும் நெகேபிலும் சேப்பெல்லாவிலும் குடியிருந்தபோதும் தீர்க்கதரிசிகள் மூலம் யெகோவா சொன்ன விஷயங்களுக்குக்+ கீழ்ப்படிய வேண்டாமா?’” என்றார்.  யெகோவாவிடமிருந்து மறுபடியும் சகரியாவுக்குச் செய்தி கிடைத்தது; அவர்,  “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘நீதிநியாயத்தோடு தீர்ப்பு கொடுங்கள்,+ ஒருவருக்கொருவர் மாறாத அன்பையும்+ இரக்கத்தையும் காட்டுங்கள். 10  விதவைகளையும் அப்பா இல்லாத பிள்ளைகளையும்* ஏமாற்றாதீர்கள்.+ மற்ற தேசத்து ஜனங்களையும் ஏழைகளையும் மோசடி செய்யாதீர்கள்;+ யாருக்கும் கெடுதல் செய்யத் திட்டம் தீட்டாதீர்கள்.’+ 11  ஆனால், அவர்கள் அதையெல்லாம் கேட்கவே இல்லை.+ முரட்டுப் பிடிவாதத்தோடு நடந்துகொண்டார்கள்.+ காதை அடைத்துக்கொண்டார்கள்.+ 12  தங்களுடைய இதயத்தை வைரம்போல்* கடினமாக்கினார்கள்.+ பரலோகப் படைகளின் யெகோவா தன்னுடைய சக்தியால் தீர்க்கதரிசிகள் மூலம் சொன்ன வார்த்தைகளுக்கும் சட்டத்துக்கும்* அவர்கள் கீழ்ப்படியவில்லை.+ அதனால், பரலோகப் படைகளின் யெகோவா பயங்கர கோபத்தோடு அவர்களைத் தண்டித்தார்”+ என்றார். 13  “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான்* கூப்பிட்டபோது அவர்கள் கேட்காததுபோல்+ அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை.+ 14  அதனால் நான் ஒரு புயல்காற்றை அனுப்பி, முன்பின் தெரியாத தேசங்களுக்கெல்லாம் அவர்களைச் சிதறிப்போக வைத்தேன்.+ அவர்களுடைய தேசம், யாரும் வந்து போக முடியாதளவுக்குப் பாழாய்ப்போனது.+ அவர்களால் அந்த அழகான தேசம் கோரமாக ஆகிவிட்டது.’”

அடிக்குறிப்புகள்

இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
நே.மொ., “நான்.”
வே.வா., “அநாதைகளையும்.”
அல்லது, “ஒரு கடினமான கல்போல்.”
வே.வா., “அறிவுரைக்கும்.”
நே.மொ., “அவர்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா