சங்கீதம் 127:1-5

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். சாலொமோனின் பாடல். 127  யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால்,கட்டுகிறவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் அது வீண்.+ யெகோவா நகரத்தைக் காக்கவில்லையென்றால்,+காவலாளிகள் என்னதான் கண் விழித்திருந்தாலும் அது வீண்.   நீ அதிகாலையிலேயே எழுந்து,ராத்திரி ரொம்ப நேரம் கண் விழித்திருந்து,வயிற்றுப் பிழைப்புக்காக எவ்வளவுதான் பாடுபட்டாலும் அது வீண்.ஏனென்றால், தனக்குப் பிரியமானவர்களின் தேவைகளை அவர் கவனித்துக்கொள்கிறார்.அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தையும் தருகிறார்.+   இதோ! பிள்ளைகள் யெகோவா தரும் சொத்து.+குழந்தைகள் அவர் தரும் பரிசு.+   இளமைக் காலத்தில் ஒருவருக்குப் பிறக்கும் மகன்கள்மாவீரனின் கையிலுள்ள அம்புகள் போல இருக்கிறார்கள்.+   அவற்றைத் தங்களுடைய அம்புக்கூடுகளில் நிரப்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+ அவர்கள் வெட்கப்பட்டுப்போக மாட்டார்கள்.ஏனென்றால், நகரவாசலில் எதிரிகளோடு அவர்கள் வழக்காடுவார்கள்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா