சங்கீதம் 141:1-10

தாவீதின் சங்கீதம். 141  யெகோவாவே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்.+ எனக்கு உதவி செய்ய சீக்கிரமாக வாருங்கள்.+ நான் கூப்பிடும்போது காதுகொடுத்துக் கேளுங்கள்.+   என் ஜெபம் உங்கள் முன்னால் செலுத்தப்படுகிற* தூபப்பொருள்போல்+ இருக்கட்டும்.+கைகளை உயர்த்தி நான் வேண்டுவது, மாலைநேர உணவுக் காணிக்கைபோல் இருக்கட்டும்.+   யெகோவாவே, என் வாய்க்குக் காவல் போடுங்கள்.என் உதடுகளின் வாசலுக்குக் காவல் வையுங்கள்.+   கெட்ட ஆசைகள் என் இதயத்தில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.+அக்கிரமக்காரர்களோடு சேர்ந்து அக்கிரமம் செய்ய என்னை விட்டுவிடாதீர்கள்.அவர்கள் தரும் விருந்தை நான் சாப்பிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.   நீதிமான் என்னை அடித்தாலும், அது அவருடைய அன்புக்கு* அடையாளமாகத்தான் இருக்கும்.+அவர் என்னைக் கண்டித்தாலும், அது என் தலைக்குக் குளுமையான எண்ணெய் போலத்தான் இருக்கும்.+நான் ஒருபோதும் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டேன்.+ அவருக்குக் கஷ்டங்கள் வரும்போதுகூட நான் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்வேன்.   நீதிபதிகள் மலையிலிருந்து தள்ளப்பட்டால்கூட,மக்கள் என் வார்த்தைகளைக் கேட்பார்கள்; ஏனென்றால், அவை இனிமையானவை.   ஒருவர் நிலத்தை உழும்போது மண்கட்டிகள் உடைந்து சிதறுவதுபோல்,எங்களுடைய எலும்புகள் கல்லறைக்கு வெளியே சிதறிக் கிடக்கின்றன.   ஆனால் உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, என் கண்கள் உங்களையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.+ நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன். என் உயிரை எடுத்து விடாதீர்கள்.   அவர்கள் வைத்திருக்கிற கண்ணியின் பிடியிலும்,அக்கிரமக்காரர்கள் வைத்திருக்கிற பொறிகளிலும் சிக்காதபடி என்னைக் காப்பாற்றுங்கள். 10  பொல்லாதவர்கள் தாங்கள் விரித்த வலைகளிலேயே விழுவார்கள்.+ஆனால், நான் அவற்றில் சிக்காமல் தப்பித்துக்கொள்வேன்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நன்றாகத் தயாரிக்கப்பட்டு உங்கள் முன்னால் செலுத்தப்படுகிற.”
வே.வா., “மாறாத அன்புக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா