சங்கீதம் 148:1-14

148  “யா”வைப் புகழுங்கள்!* பரலோகத்தில் இருப்பவர்களே, யெகோவாவைப் புகழுங்கள்.+உயரத்தில் இருப்பவர்களே, அவரைப் புகழுங்கள்.   தேவதூதர்களே, நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்.+ அவருடைய படைகளே, அவரைப் புகழுங்கள்.+   சூரியனே, சந்திரனே, அவரைப் புகழுங்கள். ஒளிவீசும் நட்சத்திரங்களே, அவரைப் புகழுங்கள்.+   வானாதி வானங்களே, அவரைப் புகழுங்கள்.மழை மேகங்களே, அவரைப் புகழுங்கள்.   அவை யெகோவாவின் பெயரைப் புகழட்டும்.அவர் கட்டளை கொடுத்தார், அவை படைக்கப்பட்டன.+   அவற்றை என்றென்றும் அவர் நிலைநிறுத்தியிருக்கிறார்.+என்றும் அழியாத சட்டத்தை அவற்றுக்குக் கொடுத்திருக்கிறார்.+   பூமியில் இருப்பவர்களே, யெகோவாவைப் புகழுங்கள்.ராட்சதக் கடல் பிராணிகளே, ஆழ்கடல்களே,   மின்னல்களே, ஆலங்கட்டிகளே,* பனித்துளிகளே, அடர்ந்த மேகங்களே,அவருடைய கட்டளையை நிறைவேற்றுகிற புயல் காற்றே,+   மலைகளே, குன்றுகளே,+கனி தரும் மரங்களே, தேவதாரு மரங்களே,+ 10  காட்டு விலங்குகளே,+ வீட்டு விலங்குகளே,ஊரும் பிராணிகளே, சிறகடிக்கும் பறவைகளே, 11  பூமியின் ராஜாக்களே, தேசங்களே,பூமியின் தலைவர்களே, நீதிபதிகளே,+ 12  இளம் ஆண்களே, இளம் பெண்களே,பெரியவர்களே, சிறியவர்களே,நீங்கள் எல்லாரும் கடவுளைப் புகழுங்கள். 13  படைப்புகள் அனைத்தும் யெகோவாவின் பெயரைப் புகழட்டும்.ஏனென்றால், அவருடைய பெயர் எட்ட முடியாதளவுக்கு உயர்ந்தது.+ அவருடைய மகத்துவம் வானத்தையும் பூமியையும்விட உயர்ந்தது.+ 14  அவர் தனக்கு உண்மையாக* இருக்கிற ஜனத்தின் புகழுக்காக,தனக்கு நெருக்கமாக இருக்கிற இஸ்ரவேலர்களின் புகழுக்காக,அவர்களுடைய பலத்தைக் கூட்டுவார். “யா”வைப் புகழுங்கள்!*

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
அதாவது, “பனிக்கட்டிகளே.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா