சங்கீதம் 15:1-5

தாவீதின் சங்கீதம். 15  யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?+   குற்றமில்லாமல்* நடந்து,+எப்போதும் சரியானதைச் செய்து,+இதயத்தில் உண்மையைப் பேசுகிறவன்தான்.+   அப்படிப்பட்டவன், மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச மாட்டான்.+மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டான்.+நண்பர்களைப் பற்றிக் கேவலமாகப் பேச மாட்டான்.*+   கீழ்த்தரமாக நடக்கிறவனோடு சேர மாட்டான்.+யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு மதிப்பு மரியாதை காட்டுவான். எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும்* கொடுத்த வாக்கை மீற மாட்டான்.+   வட்டிக்குக் கடன் கொடுக்க மாட்டான்.+அப்பாவிகள்மேல் குற்றம் சுமத்துவதற்காக லஞ்சம் வாங்க மாட்டான்.+ இப்படிப்பட்டவன் அசைக்கப்படவே* மாட்டான்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “உத்தமமாக.”
வே.வா., “நண்பர்களை அவமானப்படுத்த மாட்டான்.”
வே.வா., “தனக்கு நஷ்டம் வந்தாலும்.”
வே.வா., “தடுமாறவே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா