சங்கீதம் 20:1-9

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். 20  இக்கட்டு நாளில் உங்களுடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் தரட்டும். யாக்கோபின் கடவுளுடைய பெயர் உங்களைப் பாதுகாக்கட்டும்.+   பரிசுத்த ஆலயத்திலிருந்து அவர் உங்களுக்கு உதவி செய்யட்டும்.+சீயோனிலிருந்து உங்களுக்கு ஆதரவு தரட்டும்.+   நீங்கள் கொடுத்த எல்லா காணிக்கைகளையும் நினைத்துப் பார்க்கட்டும்.நீங்கள் செலுத்திய தகன பலியைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளட்டும். (சேலா)   உங்கள் இதயத்திலுள்ள ஆசைகளை நிறைவேற்றி வைக்கட்டும்.+உங்களுடைய எல்லா திட்டங்களும் வெற்றியடைய உதவட்டும்.   நீங்கள் தருகிற மீட்பினால் நாங்கள் சந்தோஷ ஆரவாரம் செய்வோம்.+எங்கள் கடவுளுடைய பெயரைப் போற்றிப் புகழ்வோம்.*+ உங்களுடைய வேண்டுதல்கள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றி வைக்கட்டும்.   தான் தேர்ந்தெடுத்தவரை* யெகோவா மீட்கிறார்+ என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். கடவுள் பரிசுத்தமான பரலோகத்திலிருந்து அவருக்குப் பதில் சொல்கிறார்.தன்னுடைய வலது கையால் அவருக்கு மாபெரும் வெற்றியை* தருகிறார்.+   சிலர் ரதங்களை நம்புகிறார்கள், சிலர் குதிரைகளை நம்புகிறார்கள்,+ஆனால் நாங்கள் எங்களுடைய கடவுளான யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறோம்.+   அவர்கள் வீழ்ச்சி அடைந்தார்கள்.ஆனால், நாங்கள் எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.+   யெகோவாவே, ராஜாவைக் காப்பாற்றுங்கள்!+ கடவுளே, நாங்கள் உதவி கேட்டுக் கூப்பிடும் நாளில் எங்களுக்குப் பதில் கொடுங்கள்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “பெயரில் கொடிகளை உயர்த்துவோம்.”
வே.வா., “மீட்பை.”
வே.வா., “அபிஷேகம் செய்தவரை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா