சங்கீதம் 26:1-12

தாவீதின் பாடல். 26  யெகோவாவே, நீங்கள் எனக்குத் தீர்ப்பு கொடுங்கள்; நான் உத்தமமாக நடந்திருக்கிறேன்.+யெகோவாவே, உங்கள்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன்.+   யெகோவாவே, என்னை ஆராய்ந்து பாருங்கள், என்னைச் சோதித்துப் பாருங்கள்.என்னுடைய இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* புடமிட்டுப் பாருங்கள்.+   ஏனென்றால், நான் உங்களுடைய மாறாத அன்பை எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய சத்திய வழியில் நடக்கிறேன்.+   ஏமாற்றுப் பேர்வழிகளோடு நான் பழகுவதில்லை.*+வெளிவேஷம் போடுகிறவர்களோடு சேருவதில்லை.   அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன்.+பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.*+   யெகோவாவே, நான் குற்றமற்றவனாக என் கைகளைக் கழுவிக்கொண்டு,உங்களுடைய பலிபீடத்தைச் சுற்றிவருவேன்.   அப்போது, சத்தமாக உங்களுக்கு நன்றி சொல்வேன்.+உங்களுடைய அதிசயமான செயல்களையெல்லாம் அறிவிப்பேன்.   யெகோவாவே, நீங்கள் குடிகொண்டிருக்கிற வீட்டை நேசிக்கிறேன்.+உங்களுடைய மகிமை தங்கியிருக்கிற இடத்தை விரும்புகிறேன்.+   பாவிகளோடு சேர்த்து என்னையும் அழித்துவிடாதீர்கள்.+கொடூரமானவர்களோடு* சேர்த்து என் உயிரையும் பறித்துவிடாதீர்கள். 10  அவர்களுடைய கைகள் வெட்கக்கேடான காரியங்களைச் செய்கின்றன.அவர்களுடைய வலது கையில் லஞ்சம் குவிந்திருக்கிறது. 11  ஆனால், நான் எப்போதும் உத்தமமாக நடப்பேன். என்னைக் காப்பாற்றுங்கள்,* எனக்குக் கருணை காட்டுங்கள். 12  என்னுடைய கால்கள் சமமான இடத்தில் நிற்கின்றன.+மாபெரும் சபையில்* நான் யெகோவாவைப் புகழ்வேன்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆழமான உணர்ச்சிகளையும்.” நே.மொ., “என் சிறுநீரகங்களையும்.”
நே.மொ., “உட்காருவதில்லை.”
நே.மொ., “பொல்லாதவர்களோடு உட்காருவதில்லை.”
வே.வா., “இரத்தம் சிந்துகிறவர்களோடு.”
நே.மொ., “விடுவியுங்கள்.”
நே.மொ., “கூட்டங்களில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா