சங்கீதம் 38:1-22

ஒரு நினைப்பூட்டுதலாக* தாவீது பாடிய சங்கீதம். 38  யெகோவாவே, என்னைக் கோபத்தோடு கண்டிக்காதீர்கள்.என்னைக் கடும் கோபத்தோடு திருத்தாதீர்கள்.+   உங்களுடைய அம்புகள் என் உடம்பில் ஆழமாகப் பாய்ந்திருக்கின்றன.உங்களுடைய கைகள் என்னை அழுத்துகின்றன.+   உங்கள் கோபத்தால் என் உடல் முழுவதும் ரணமாக இருக்கிறது. நான் பாவம் செய்ததால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்.*+   என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் குவிந்திருக்கின்றன.+பாரமான சுமைபோல் என்னை அழுத்துகின்றன.என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.   என்னுடைய முட்டாள்தனத்தால்என் உடம்பிலுள்ள புண்கள் சீழ்பிடித்து நாற்றமெடுக்கின்றன.   வேதனையில் துடிக்கிறேன், மிகவும் நொந்துபோய் இருக்கிறேன்.நாள் முழுவதும் சோகமாக நடமாடுகிறேன்.   எனக்குள் நெருப்பு பற்றியெரிவதுபோல் இருக்கிறது.என் உடல் முழுவதும் ரணமாக இருக்கிறது.+   நான் உணர்ச்சியற்றவன்போல் ஆகிவிட்டேன், நொறுங்கிப்போய்விட்டேன்.வேதனை என் நெஞ்சைப் பிழிவதால் சத்தமாக முனகுகிறேன்.   யெகோவாவே, என்னுடைய எல்லா ஆசைகளும் உங்களுக்குத் தெரியும்.நான் வேதனையில் பெருமூச்சு விடுவதும் உங்களுக்குத் தெரியும். 10  என்னுடைய நெஞ்சு படபடக்கிறது, என்னுடைய சக்தியெல்லாம் போய்விட்டது.என்னுடைய கண்கள் ஒளி இழந்துவிட்டன.+ 11  என்னுடைய புண்களைப் பார்த்து நண்பர்களும் நெருக்கமானவர்களும்என்னைவிட்டு ஒதுங்கிப் போகிறார்கள்.உயிர் நண்பர்கள்கூட விலகிப் போகிறார்கள். 12  என்னைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்.எனக்குத் தீங்கு செய்ய நினைக்கிறவர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்.+நாள் முழுக்க அவர்கள் வாயிலிருந்து பொய்யும் புரட்டும்தான் வருகிறது. 13  ஆனால், நான் செவிடனைப் போல எதையும் கேட்காமல் இருக்கிறேன்.+ஊமையனைப் போல வாய் திறக்காமல் இருக்கிறேன்.+ 14  காது கேட்காதவனைப் போல நான் ஆகிவிட்டேன்.எதிர்த்து வாதாட முடியாதவனைப் போல ஆகிவிட்டேன். 15  யெகோவாவே, உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்.+என் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் எனக்குப் பதில் கொடுத்தீர்கள்.+ 16  நான் உங்களிடம், “எதிரிகள் என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க விடாதீர்கள்.எனக்கு அடிசறுக்குவதைப் பார்த்து அவர்கள் ஆணவமடைய விடாதீர்கள்” என்று சொல்லியிருந்தேன். 17  நான் விழுந்துவிடும் நிலையில் இருந்தேன்.எப்போதும் வலியில் துடித்துக்கொண்டிருந்தேன்.+ 18  என் பாவம் என்னை வாட்டி வதைத்தது.+என்னுடைய குற்றத்தை ஒத்துக்கொண்டேன்.+ 19  ஆனால், என் எதிரிகள் துடிப்பும் வலிமையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.*காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் ஏராளமாகப் பெருகிவிட்டார்கள். 20  நான் நல்லது செய்தேன், ஆனால் அவர்கள் எனக்குக் கெட்டதுதான் செய்தார்கள்.நான் நல்ல வழியில் போனதால் என்னை எதிர்த்தார்கள். 21  யெகோவாவே, என்னைக் கைவிட்டு விடாதீர்கள். கடவுளே, என்னைவிட்டுத் தூரமாக நிற்காதீர்கள்.+ 22  யெகோவாவே, நீங்கள்தான் என் மீட்பர்.சீக்கிரமாக வந்து எனக்கு உதவி செய்யுங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஞாபகத்துக்குக் கொண்டுவருவதற்காக.”
நே.மொ., “என் எலும்புகளில் நிம்மதி இல்லை.”
அல்லது, “காரணமே இல்லாமல் நிறைய பேர் எனக்கு எதிரியாகிவிட்டார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா