சங்கீதம் 64:1-10

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். 64  கடவுளே, நான் கெஞ்சும்போது கேளுங்கள்.+ எதிரியின் மிரட்டலுக்கு முடிவுகட்டி என் உயிரைக் காப்பாற்றுங்கள்.   பொல்லாதவர்களின் ரகசியத் திட்டங்களிலிருந்தும்,+அக்கிரமக்காரர்களின் கும்பலிலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.   அவர்கள் தங்களுடைய நாவை வாள்போல் கூர்மையாக்குகிறார்கள்.கொடூரமான வார்த்தைகளை அம்புகள்போல் குறிபார்த்து எறிகிறார்கள்.   மறைவான இடங்களிலிருந்து அப்பாவி மனிதனை அந்த அம்புகளால் தாக்குகிறார்கள்.பயமே இல்லாமல் திடீரென்று அவனைத் தாக்குகிறார்கள்.   தங்களுடைய கெட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.*கண்ணிகளை எப்படி மறைத்து வைக்கலாம் என்று கலந்து பேசுகிறார்கள். “இவற்றை யாரும் பார்க்க மாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+   தவறுகள் செய்வதற்குப் புதுப்புது வழிகளைத் தேடுகிறார்கள்.யாருக்கும் தெரியாமல் சாமர்த்தியமான திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.+ஒவ்வொருவனுடைய உள்ளத்திலும் இருக்கிற யோசனையைக் கண்டுபிடிப்பது கஷ்டம்.   ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்பு எறிவார்.+எதிர்பார்க்காத நேரத்தில் அந்த அம்பு அவர்களைத் துளைக்கும்.   அவர்களுடைய நாவினாலேயே அவர்கள் சீரழிவார்கள்.+அவர்களைப் பார்க்கிற எல்லாரும் அதிர்ச்சியில் தலையை ஆட்டுவார்கள்.   மக்கள் எல்லாரும் பயந்துபோய்,கடவுள் செய்திருக்கும் காரியங்களை அறிவிப்பார்கள்.அவருடைய செயல்களைப் பற்றி அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருப்பார்கள்.+ 10  நீதிமான்கள் யெகோவாவை நினைத்து சந்தோஷப்பட்டு, அவரிடம் தஞ்சம் அடைவார்கள்.+நேர்மையான நெஞ்சமுள்ள எல்லாரும் பூரித்துப்போவார்கள்.*

அடிக்குறிப்புகள்

வே.வா., “கெட்டது செய்ய ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துகிறார்கள்.”
வே.வா., “பெருமையாகப் பேசுவார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா