சங்கீதம் 97:1-12

97  யெகோவா ராஜாவாகிவிட்டார்!+ பூமி பூரித்துப்போகட்டும்!+ தீவுகளெல்லாம் சந்தோஷத்தில் துள்ளட்டும்!+   அடர்ந்த கார்மேகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன.+நீதியும் நியாயமும் அவருடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+   அவருக்கு முன்னால் நெருப்பு போகிறது.+அவருடைய எதிரிகளை எல்லா பக்கத்திலிருந்தும் சுட்டுப்பொசுக்குகிறது.+   அவருடைய மின்னல் நிலத்தைப் பிரகாசிக்க வைக்கிறது.பூமி அதைப் பார்த்து நடுநடுங்குகிறது.+   இந்த முழு பூமிக்கும் எஜமானாகிய யெகோவாவுக்கு முன்னால்,மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.+   வானம் அவருடைய நீதியைச் சொல்கிறது.மக்கள் எல்லாரும் அவருடைய மகிமையைப் பார்க்கிறார்கள்.+   செதுக்கப்பட்ட சிலைகளை வணங்குகிற எல்லாரும்,ஒன்றுக்குமே உதவாத தெய்வங்களைப் பற்றிப் பெருமையடிக்கிற எல்லாரும்+ அவமானப்பட்டுப் போகட்டும்.+ தெய்வங்களே, நீங்கள் எல்லாரும் அவரை வணங்குங்கள்.*+   யெகோவாவே, உங்களுடைய நீதித்தீர்ப்புகளைக் கேட்டு,சீயோன் மகிழ்கிறது.+யூதாவின் நகரங்கள் சந்தோஷப்படுகின்றன.+   யெகோவாவே, நீங்கள்தான் இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.நீங்கள்தான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட மிக மிக உயர்ந்தவர்.+ 10  யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்.+ தனக்கு உண்மையாக* இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார்.+பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.+ 11  நீதிமான்களுக்காக ஒளி பிரகாசிக்கிறது.+நேர்மையான நெஞ்சமுள்ளவர்களுக்காகச் சந்தோஷம் பிரகாசிக்கிறது. 12  நீதிமான்களே, யெகோவாவை வணங்குவதில்* சந்தோஷப்படுங்கள்.அவருடைய பரிசுத்த பெயருக்கு நன்றி சொல்லுங்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவருக்குமுன் தலைவணங்குங்கள்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “யெகோவாவில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா