Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • யூதா மற்றும் சிமியோன் கோத்திரத்தார் கைப்பற்றிய இடங்கள் (1-20)

    • எபூசியர்கள் தொடர்ந்து எருசலேமிலேயே குடியிருக்கிறார்கள் (21)

    • யோசேப்பின் வம்சத்தார் பெத்தேலைக் கைப்பற்றுகிறார்கள் (22-26)

    • கானானியர்கள் முழுவதுமாகத் துரத்தியடிக்கப்படுவதில்லை (27-36)

  • 2

    • யெகோவாவின் தூதரிடமிருந்து ஓர் எச்சரிக்கை (1-5)

    • யோசுவா இறந்துபோகிறார் (6-10)

    • இஸ்ரவேலர்களைக் காப்பதற்காக நியாயாதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் (11-23)

  • 3

    • இஸ்ரவேலர்களை யெகோவா பரீட்சை பார்க்கிறார் (1-6)

    • ஒத்னியேல், முதல் நியாயாதிபதி (7-11)

    • நியாயாதிபதியான ஏகூத் குண்டாக இருந்த எக்லோன் ராஜாவைக் கொன்றுபோடுகிறார் (12-30)

    • நியாயாதிபதியான சம்கார் (31)

  • 4

    • கானானிய ராஜாவான யாபீன் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்குகிறான் (1-3)

    • தீர்க்கதரிசனம் சொல்கிறவளான தெபொராளும் நியாயாதிபதியான பாராக்கும் (4-16)

    • படைத் தளபதியான சிசெராவை யாகேல் கொன்றுபோடுகிறாள் (17-24)

  • 5

    • தெபொராள் மற்றும் பாராக்கின் வெற்றிப் பாடல் (1-31)

      • சிசெராவுக்கு எதிராக நட்சத்திரங்கள் போர் செய்கின்றன (20)

      • கீசோன் நீரோடை பெருக்கெடுக்கிறது (21)

      • யெகோவாவை நேசிக்கிறவர்கள் சூரியனைப் போல் பிரகாசிக்கிறார்கள் (31)

  • 6

    • மீதியானியர்கள் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்குகிறார்கள் (1-10)

    • நியாயாதிபதியான கிதியோனுக்குக் கடவுளின் ஆதரவு இருப்பதாகத் தேவதூதர் உறுதியளிக்கிறார் (11-24)

    • பாகாலின் பலிபீடத்தை கிதியோன் இடித்துப்போடுகிறார் (25-32)

    • கிதியோனுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது (33-35)

    • கம்பளித் தோலை வைத்து சோதனை (36-40)

  • 7

    • கிதியோனும் அவருடைய 300 ஆட்களும் (1-8)

    • கிதியோனின் படை மீதியானியர்களைத் தோற்கடிக்கிறது (9-25)

      • “இது யெகோவாவின் போர்! கிதியோனின் போர்!” (20)

      • மீதியானியர்களின் முகாமில் ஏற்பட்ட குழப்பம் (21, 22)

  • 8

    • எப்பிராயீமியர்கள் கிதியோனிடம் வாக்குவாதம் செய்கிறார்கள் (1-3)

    • மீதியானிய ராஜாக்கள் துரத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள் (4-21)

    • ராஜாவாக இருக்க கிதியோன் மறுத்துவிடுகிறார் (22-27)

    • கிதியோனுடைய வாழ்க்கை விவரம் (28-35)

  • 9

    • அபிமெலேக்கு சீகேமில் ராஜாவாகிறான் (1-6)

    • யோதாம் சொல்லும் கதை (7-21)

    • அபிமெலேக்கின் கொடுங்கோல் ஆட்சி (22-33)

    • அபிமெலேக்கு சீகேமைத் தாக்குகிறான் (34-49)

    • ஒரு பெண்ணால் அபிமெலேக்கு படுகாயமடைந்து செத்துப்போகிறான் (50-57)

  • 10

    • நியாயாதிபதிகளான தோலாவும் யாவீரும் (1-5)

    • இஸ்ரவேலர்கள் அடங்காமல் போவதும் மனம் திரும்புவதும் (6-16)

    • அம்மோனியர்கள் இஸ்ரவேலர்களோடுபோர் செய்ய வருகிறார்கள் (17, 18)

  • 11

    • யெப்தா முதலில் துரத்திவிடப்படுகிறார், பின்பு நியாயாதிபதியாக நியமிக்கப்படுகிறார் (1-11)

    • அம்மோனியர்களிடம் யெப்தா காரணங்களை எடுத்துச்சொல்கிறார் (12-28)

    • யெப்தாவின் நேர்த்திக்கடனும் அவருடைய மகளும் (29-40)

      • யெப்தாவின் மகள் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருக்கிறாள் (38-40)

  • 12

    • எப்பிராயீமியர்கள் யெப்தாவோடு சண்டை போடுகிறார்கள் (1-7)

      • ஷிபோலேத் என்று சொல்லும்படி கேட்கப்படுகிறார்கள் (6)

    • நியாயாதிபதிகளான இப்சான், ஏலோன், அப்தோன் (8-15)

  • 13

    • மனோவாவையும் அவருடைய மனைவியையும் ஒரு தேவதூதர் சந்திக்கிறார் (1-23)

    • சிம்சோன் பிறக்கிறார் (24, 25)

  • 14

    • ஒரு பெலிஸ்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்ய சிம்சோன் ஆசைப்படுகிறார் (1-4)

    • யெகோவாவின் சக்தியால் சிம்சோன் ஒரு சிங்கத்தைக் கொன்றுபோடுகிறார் (5-9)

    • கல்யாணத்தின்போது சிம்சோன் சொல்லும் விடுகதை (10-19)

    • சிம்சோனின் மனைவி வேறொருவனுக்குக் கல்யாணம் செய்துவைக்கப்படுகிறாள் (20)

  • 15

    • பெலிஸ்தியர்களை சிம்சோன் பழிவாங்குகிறார் (1-20)

  • 16

    • காசாவில் சிம்சோன் (1-3)

    • சிம்சோனும் தெலீலாளும் (4-22)

    • சிம்சோன் பழிவாங்கிவிட்டுச் செத்துப்போகிறார் (23-31)

  • 17

    • மீகாவின் சிலைகளும் அவனுடைய பூசாரியும் (1-13)

  • 18

    • தாண் கோத்திரத்தார் இடம் தேடுகிறார்கள் (1-31)

      • மீகாவின் சிலைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, பூசாரியும் கொண்டுபோகப்படுகிறான் (14-20)

      • லாயீஸ் கைப்பற்றப்பட்டு அதற்கு தாண் என்று பெயர் வைக்கப்படுகிறது (27-29)

      • தாணில் சிலை வணக்கம் (30, 31)

  • 19

    • கிபியாவில் பென்யமீனியர்கள் பாலியல் குற்றம் செய்கிறார்கள் (1-30)

  • 20

    • பென்யமீனியர்களுக்கு எதிரான போர் (1-48)

  • 21

    • பென்யமீன் கோத்திரம் அழியாதபடி பாதுகாக்கப்படுகிறது (1-25)