நீதிமொழிகள் 20:1-30

20  திராட்சமது கேலி செய்யும்,+மதுபானம் அடாவடித்தனம் பண்ணும்.+அவற்றால் வழிதவறிப் போகிற எவனும் ஞானம் இல்லாதவன்.+   சிங்கத்தின் கர்ஜனைக்குப் பயப்படுவதுபோல், எல்லாரும் ராஜாவுக்குப் பயப்படுகிறார்கள்.+அவருடைய கோபத்தைக் கிளறுகிறவன் தன்னுடைய உயிருக்கே உலை வைக்கிறான்.+   வாக்குவாதம் செய்யாமல் இருப்பது ஒருவருக்கு மரியாதை.+ஆனால், முட்டாள்கள் சட்டென்று வாக்குவாதத்தில் இறங்குவார்கள்.+   சோம்பேறி குளிர் காலத்தில் நிலத்தை உழ மாட்டான்.அதனால் அறுவடைக் காலத்தில் கையேந்தி நிற்பான்.*+   மனிதனுடைய உள்ளத்தில் இருக்கும் யோசனைகள்* ஆழமான தண்ணீர்போல் இருக்கின்றன.ஆனால், பகுத்தறிவு உள்ளவன் அதை மொண்டெடுப்பான்.   நிறைய பேர் தாங்கள் விசுவாசமாய் இருப்பதாக* சொல்லிக்கொள்கிறார்கள்.ஆனால், விசுவாசமாக இருப்பவனை யாரால் கண்டுபிடிக்க முடியும்?   நீதிமான் தன் உத்தமத்தில் நடக்கிறான்.+ அவனுக்குப் பிறக்கும் பிள்ளைகள் சந்தோஷமானவர்கள்.+   தீர்ப்பு சொல்ல ராஜா சிம்மாசனத்தில் உட்காரும்போது,+ஒரே பார்வையில் கெட்டதையெல்லாம் சலித்தெடுத்துவிடுகிறார்.+   “இப்போது என் இதயம் சுத்தமாக இருக்கிறது,+என்னிடம் பாவமே இல்லை” என்று யாரால் சொல்ல முடியும்?+ 10  போலி எடைக்கற்களும் போலி படிகளும்*யெகோவாவுக்கு அருவருப்பானவை.+ 11  சிறுபிள்ளையைக்கூட அவனுடைய செயலை வைத்தே எடைபோட முடியும்.அவனுடைய நடத்தை சுத்தமாகவும் சரியாகவும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும்.+ 12  கேட்பதற்குக் காதுகள், பார்ப்பதற்குக் கண்கள்,இரண்டையுமே யெகோவாதான் உண்டாக்கினார்.+ 13  தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் வறுமையில் வாடுவாய்.+ கண் விழித்திரு, அப்போது வயிறார சாப்பிடுவாய்.+ 14  பொருளை வாங்குபவன், “அது சரியில்லை, இது சரியில்லை” என்று சொல்வான்.ஆனால், பேரம் பேசி வாங்கிச் சென்ற பிறகு அதைப் பற்றிப் பெருமையடிப்பான்.+ 15  தங்கம் இருக்கலாம், ஏராளமான பவளமும்* இருக்கலாம்.ஆனால், அறிவை உதிர்க்கும் உதடுகள்தான் விலைமதிப்புள்ளவை.+ 16  ஒருவன் முன்பின் தெரியாதவரின் கடனுக்குப் பொறுப்பேற்றிருந்தால், அவனுடைய அங்கியை எடுத்துக்கொள்.+அன்னியப் பெண்ணுக்காக* அவன் அப்படிச் செய்திருந்தால், அவனிடம் அடமானம் வாங்காமல் விடாதே.+ 17  ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் சாப்பிடுகிற சாப்பாடு ருசியாக இருக்கும்.ஆனால், பிற்பாடு வாய் நிறைய கற்களை அள்ளிப்போட்டதுபோல் இருக்கும்.+ 18  கலந்துபேசினால்* திட்டங்கள் வெற்றி பெறும்.+திறமையான வழிநடத்துதலைப் பெற்று போருக்குப் போ.+ 19  இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் ரகசியங்களை அம்பலப்படுத்துகிறான்.+அதனால், வம்பளப்பதில் ஆர்வமாக இருக்கிறவர்களோடு* சேராதே. 20  அப்பாவையும் அம்மாவையும் சபிக்கிறவனுடைய விளக்கு,இருள் சூழ்ந்துகொள்ளும் நேரத்தில் அணைக்கப்படும்.+ 21  ஆரம்பத்தில் பேராசையோடு சம்பாதித்த சொத்து,கடைசியில் அவனுக்கு ஆசீர்வாதமாக இருக்காது.+ 22  “பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று சொல்லாதே.+ யெகோவாமேல் நம்பிக்கையாக இரு,+ அவர் உன்னைக் காப்பாற்றுவார்.+ 23  போலி எடைக்கற்களை* யெகோவா அருவருக்கிறார்.கள்ளத் தராசு நல்லதல்ல. 24  மனிதனின் காலடிகளை யெகோவா வழிநடத்துகிறார்.+இல்லையென்றால், அவன் எப்படித் தன்னுடைய வழியைப் புரிந்துகொள்வான்? 25  “அர்ப்பணிக்கிறேன்!” என்று அவசரப்பட்டு நேர்ந்துகொண்டு பின்னால் யோசிப்பது, மனிதனுக்கு ஒரு கண்ணியாக இருக்கிறது.+ 26  ஞானமான ராஜா பொல்லாதவர்களைச் சலித்தெடுத்து,+போரடிக்கும் சக்கரங்களை அவர்கள்மேல் ஏற்றுகிறார்.+ 27  மனிதன் வெளிவிடுகிற மூச்சுக்காற்று யெகோவாவின் விளக்கு.அது அவனுடைய அடிமனதில் இருப்பதை வெட்டவெளிச்சமாக்கும். 28  மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் ராஜாவைப் பாதுகாக்கும்.+மாறாத அன்பினால் தன்னுடைய சிம்மாசனத்தை அவர் நிலைநிறுத்துகிறார்.+ 29  இளைஞர்களுடைய அழகு அவர்களுடைய பலம்.+வயதானவர்களுடைய கம்பீரம் அவர்களுடைய நரைமுடி.+ 30  காயங்களும் தழும்புகளும் கெட்டதை விட்டுவிட உதவும்.+பிரம்படி ஒருவனை அடியோடு திருத்தும்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “அறுவடைக் காலத்தில் அவன் தேடும்போது எதுவும் கிடைக்காது.”
வே.வா., “மனிதனுடைய உள்ளெண்ணங்கள்.”
வே.வா., “மாறாத அன்பு காட்டுவதாக.”
வே.வா., “இரண்டு விதமான எடைக்கற்களும், இரண்டு விதமான அளவைகளும்.”
வே.வா., “வேறு தேசத்தைச் சேர்ந்தவருக்காக.”
வே.வா., “ஒன்றுகூடி ஆலோசனை செய்தால்.”
வே.வா., “பேசி மயக்குகிறவர்களோடு.”
வே.வா., “இரண்டு விதமான எடைக்கற்களை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா