பிரசங்கி 11:1-10

11  உன் ரொட்டியைத் தண்ணீரின் மேல் தூக்கிப் போடு,+ நிறைய நாட்களுக்குப் பிறகு அது மறுபடியும் உனக்குக் கிடைக்கும்.+  உன்னிடம் இருப்பதை ஏழு பேருக்குக் கொடு, எட்டுப் பேருக்குக்கூட கொடு.+ ஏனென்றால், இந்த உலகத்துக்கு எப்படிப்பட்ட பேராபத்து வருமென்று உனக்குத் தெரியாதே.  மேகங்களில் தண்ணீர் நிறைந்திருந்தால், அது பூமியில் மழையாகக் கொட்டும். மரம் வடக்கே விழுந்தாலும் தெற்கே விழுந்தாலும், விழுந்த இடத்தில்தான் கிடக்கும்.  காற்றையே பார்த்துக்கொண்டிருக்கிறவன் விதைக்க மாட்டான், மேகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறவன் அறுவடை செய்ய மாட்டான்.+  கர்ப்பிணியின் வயிற்றிலுள்ள குழந்தையின் எலும்புகளில் உயிர்சக்தி* எப்படிச் செயல்படுகிறது என்று உனக்குத் தெரியாது;+ அது போலவே, எல்லாவற்றையும் செய்கிற உண்மைக் கடவுள் எப்படிச் செயல்படுகிறார் என்று உனக்குத் தெரியாது.+  காலையில் விதை விதைக்கத் தொடங்கு, சாயங்காலம்வரை கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இரு.+ ஏனென்றால், எது முளைக்கும் என்று உனக்குத் தெரியாது. இதுவா, அதுவா, அல்லது இரண்டுமா என்று உனக்குத் தெரியாது.  வெளிச்சம் அருமையானது, கண்கள் சூரியனைப் பார்ப்பது நல்லது.  ஒருவன் ஆண்டாண்டு காலம் வாழ்ந்தாலும் ஆனந்தமாக வாழ வேண்டும்.+ அதேசமயத்தில், இருண்ட காலம் வரும் என்பதையும் அவன் ஞாபகத்தில் வைக்க வேண்டும். இனி வரப்போவதெல்லாம் வீண்தான்.+  இளைஞனே, இளமைக் காலத்தில் சந்தோஷமாக இரு. வாலிப வயதில் உன் இதயம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கட்டும். உன் இதயம் சொல்கிற வழிகளில் போ, உன் கண் போகிற போக்கில் போ. ஆனால், அதற்கெல்லாம் நீ உண்மைக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதே.+ 10  அதனால், பிரச்சினைக்குரிய விஷயங்களை உன் இதயத்திலிருந்து எடுத்துவிடு. தீய காரியங்களை உன் உடலிலிருந்து நீக்கிவிடு. ஏனென்றால், இளமைத் துடிப்பும் இளமைப் பருவமும் சீக்கிரத்தில் மறைந்துவிடும்.*+

அடிக்குறிப்புகள்

கடவுளுடைய சக்தியையும் குறிக்கலாம்.
வே.வா., “பருவமும் வீணானவை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா