மல்கியா 4:1-6

4  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “சூளைபோல் எரியும் நாள் வருகிறது.+ அந்த நாளில், அகங்காரம்* பிடித்தவர்களும் அக்கிரமம் செய்கிறவர்களும் வைக்கோலைப் போலப் பொசுங்கிவிடுவார்கள். அது அவர்களை மொத்தமாக அழித்துவிடும். அவர்களுடைய வேரையும் விட்டுவைக்காது, கிளையையும் விட்டுவைக்காது.  ஆனால், நீங்கள் என்னுடைய பெயரை மகிமைப்படுத்துவதால், உங்கள்மேல் நீதியின் சூரியன் பிரகாசிக்கும். அதன் கதிர்கள் உங்களைக் குணமாக்கும். நீங்கள் கொழுத்த கன்றுகளைப் போலத் துள்ளிக் குதிப்பீர்கள்.”  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் நடவடிக்கை எடுக்கும் நாளில், கெட்டவர்கள் உங்களுடைய காலடியில் கிடக்கிற தூசிபோல் இருப்பார்கள். நீங்கள் அவர்களை மிதித்துப்போடுவீர்கள்.  என் ஊழியனான மோசே மூலம் நான் கொடுத்த திருச்சட்டத்தை நினைத்துப் பாருங்கள். இஸ்ரவேலர்கள் எல்லாரும் கடைப்பிடிப்பதற்காக நான் ஓரேபிலே கொடுத்த விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் ஞாபகப்படுத்திப் பாருங்கள்.+  யெகோவாவின் படுபயங்கரமான மகா நாள்+ வருவதற்குமுன் நான் எலியா தீர்க்கதரிசியை+ உங்களிடம் அனுப்புகிறேன்.  நான் வந்து உலகத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதபடி, அப்பாக்களின் உள்ளத்தைத் திருத்தி பிள்ளைகளின் உள்ளத்தைப் போல அவன் மாற்றுவான்.*+ பிள்ளைகளின் உள்ளத்தைத் திருத்தி அப்பாக்களின் உள்ளத்தைப் போல மாற்றுவான்.”*

அடிக்குறிப்புகள்

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “அப்பாக்களின் உள்ளத்தைப் பிள்ளைகளிடம் திருப்புவான்.”
வே.வா., “பிள்ளைகளின் உள்ளத்தை அப்பாக்களிடம் திருப்புவான்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா