யோபு 28:1-28

28  பின்பு அவர், “வெள்ளியைத் தோண்டி எடுக்க ஒரு இடம் இருக்கிறது.தங்கத்தைப் புடமிடவும் ஒரு இடம் இருக்கிறது.+   மனுஷன் மண்ணிலிருந்து இரும்பை எடுக்கிறான்.பாறையிலிருந்து செம்பை உருக்கி எடுக்கிறான்.+   அதற்காக நிலத்துக்கு அடியிலுள்ள இருட்டையும் வெளிச்சமாக்குகிறான்.கும்மிருட்டுக்குள் எவ்வளவு தூரம் இறங்க முடியுமோ அவ்வளவு தூரம் இறங்குகிறான்.விலைமதிப்புள்ள பொருள்களைத் தேடுகிறான்.   ஜனங்கள் குடியிருக்கிற இடத்தைவிட்டு ரொம்பத் தூரத்தில் சுரங்கம் தோண்டுகிறான்.மனுஷ நடமாட்டமே இல்லாமல்போன இடத்தில் தோண்டுகிறான்.சிலர் கயிற்றில் தொங்கிக்கொண்டு கீழே இறங்கி வேலை செய்கிறார்கள்.   நிலத்துக்கு மேல் பயிர் விளைகிறது.நிலத்துக்கு அடியிலோ, தீ வைத்ததுபோல் எல்லாம் தாறுமாறாகிறது.*   அங்கே இருக்கிற பாறைகளில் நீலமணிக் கல் கிடைக்கிறது.அங்கே இருக்கிற மண்ணில் தங்கம் கலந்திருக்கிறது.   அந்தச் சுரங்கப் பாதை எந்தக் கழுகின் கண்ணுக்கும் தெரியாது.கறுப்புப் பருந்தும் அதைப் பார்த்தது கிடையாது.   கொடிய மிருகங்கள் அங்கே நடமாடியதில்லை.இளம் சிங்கம் அங்கே சுற்றித் திரிந்ததில்லை.   கெட்டியான பாறையை மனுஷன் உடைக்கிறான்.மலைகளைப் புரட்டிப் போடுகிறான். 10  பாறையில் வாய்க்கால்களை வெட்டுகிறான்.+விலைமதிப்புள்ள பொருள்களைப் பார்க்கிறான். 11  நிலத்தடி நீரோடைகளுக்கு அணை போடுகிறான்.மறைந்து கிடப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறான். 12  ஆனால், ஞானத்தை எங்கே போய்க் கண்டுபிடிப்பது?+புத்தி* இருக்கிற இடத்தை எங்கே போய்த் தேடுவது?+ 13  அதன் மதிப்பு எந்த மனுஷனுக்கும் தெரியாது.+இந்த உலகத்தில் எங்கேயும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. 14  ‘அது எனக்குள்ளே இல்லை’ என்று ஆழ்கடல் சொல்கிறது. ‘அது என்னிடம் இல்லை’ என்று பெருங்கடலும் சொல்கிறது.+ 15  சுத்தமான தங்கத்தைக் கொடுத்து அதை வாங்க முடியாது.எவ்வளவு வெள்ளி கொடுத்தாலும் அது கிடைக்காது.+ 16  ஓப்பீரின்* தங்கத்தைக் கொடுத்து அதை வாங்க முடியாது.+அபூர்வமாகக் கிடைக்கிற கோமேதகத்தையும் நீலமணிக் கல்லையும் கொடுத்தால்கூட அது கிடைக்காது. 17  தங்கமும் விலை உயர்ந்த கண்ணாடியும் அதன் பக்கத்தில் வர முடியாது.சொக்கத்தங்கத்தில் செய்த பாத்திரத்தைக் கொடுத்தாலும் அது கிடைக்காது.+ 18  பவளமும் படிகக்கல்லும் அதன் பக்கத்தில் நெருங்க முடியாது.+பை நிறைய இருக்கிற முத்துக்களைவிட ஞானம் ரொம்பவே மதிப்புள்ளது. 19  எத்தியோப்பியாவின்* புஷ்பராகக் கல்லும்+ அதற்குச் சமமாகாது.சுத்தமான தங்கத்தைக் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது. 20  அப்படியென்றால், ஞானம் எங்கேதான் இருக்கிறது?புத்தி* எங்கிருந்துதான் கிடைக்கிறது?+ 21  எல்லா உயிர்களின் கண்ணுக்கும் அது மறைவாக இருக்கிறது.+வானத்தில் பறக்கிற பறவைகளாலும் அதைப் பார்க்க முடியாது. 22  ‘அதைப் பற்றி ஏதோ கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறோம்’என்று கல்லறையும்* சாவும் சொல்கின்றன. 23  அதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.அது எங்கே இருக்கிறது என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.+ 24  அவருடைய கண் பூமி முழுவதையும் பார்க்கிறது.வானத்துக்குக் கீழே இருக்கிற எல்லாவற்றையும் அவர் கவனிக்கிறார்.+ 25  அவர் காற்றுக்குப் பலத்தைக் கொடுத்தபோது,+தண்ணீரை அளந்து வைத்தபோது,+ 26  மழைக்குச் சட்டம் போட்டபோது,+மழைமேகத்துக்கும் இடிமுழக்கத்துக்கும் வழியை உண்டாக்கியபோது,+ 27  அவர் ஞானத்தைப் பார்த்தார், அதை விளக்கிக் காட்டினார்.அதை நிலைநிறுத்தினார், அதைச் சீர்தூக்கிப் பார்த்தார். 28  அவர் மனுஷனிடம், ‘யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானம்.+கெட்ட காரியங்களை விட்டு விலகுவதுதான் புத்திக்கு* அடையாளம்’+ என்று சொன்னார்” என்றார்.

அடிக்குறிப்புகள்

அநேகமாக, சுரங்க வேலையைக் குறிக்கலாம்.
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”
ஓப்பீர் என்ற இடம், உயர்தரமான தங்கத்துக்குப் பேர்போனது.
எபிரெயுவில், “கூஷின்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”
நே.மொ., “அழிவும்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலுக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா