யோபு 35:1-16
35 பின்பு எலிகூ,
2 “‘கடவுளைவிட நான் நீதியுள்ளவன்’ என்று சொல்கிறீர்களே,உங்கள்மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?+
3 ‘நான் நீதிமானாக இருந்து என்ன பிரயோஜனம்?*
பாவம் செய்யாததால் அப்படி என்ன பலன் கிடைத்துவிட்டது?’+ என்று கேட்கிறீர்களே.
4 நான் உங்களுக்குப் பதில் சொல்கிறேன்.உங்களோடு இருக்கிறவர்களுக்கும்+ சேர்த்து பதில் சொல்கிறேன்.
5 வானத்தைக் கொஞ்சம் அண்ணாந்து பாருங்கள்.அவ்வளவு உயரத்தில் இருக்கிற மேகங்களைக் கவனித்துப் பாருங்கள்.+
6 நீங்கள் பாவம் செய்வதால் கடவுளுக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது?+
அக்கிரமங்கள் செய்வதால் அவருக்கு என்ன ஆகப்போகிறது?+
7 நீங்கள் நீதிமானாக இருப்பதால் அவருக்கு என்ன லாபம்?நேர்மையாக இருப்பதால் அவருக்கு என்ன பிரயோஜனம்?+
8 நீங்கள் அக்கிரமம் செய்வதால் பாதிக்கப்படுவது உங்களைப் போன்ற மனுஷர்கள்தான்.உங்கள் நீதியினால் நன்மை அடைவதும் மனுஷர்கள்தான்.
9 கொடுமை தாங்க முடியாமல் ஜனங்கள் கதறி அழுகிறார்கள்.அடக்கி ஒடுக்குகிறவர்களின் கையிலிருந்து காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்கள்.+
10 ஆனால் யாருமே, ‘என்னுடைய மகத்தான படைப்பாளராகிய கடவுள் எங்கே?+ராத்திரியில் நான் புகழ் பாடல்களைப் பாடுவதற்குக் காரணமானவர் எங்கே?’+ என்று கேட்பதில்லை.
11 மிருகங்களைவிட+ நமக்கு அதிகமான அறிவைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.+பறவைகளைவிட நமக்கு அதிகமான புத்தியைக் கொடுத்திருக்கிறார்.
12 ஆனால், கெட்ட ஜனங்கள் பெருமைபிடித்து அலைகிறார்கள்.+அதனால்தான், அவர்கள் உதவிக்காகக் கெஞ்சினாலும் கடவுள் கேட்பதில்லை.+
13 அவரிடம் நாம் போலித்தனமாகக் கெஞ்சினால் அவர் கேட்பாரா?+சர்வவல்லமையுள்ளவர் கண்டிப்பாக அதைக் காதில் வாங்க மாட்டார்.
14 அப்படியிருக்கும்போது, அவர் உங்களைக் கண்டுகொள்வதில்லை என்று புலம்பினால்+ அவர் கேட்பாரா?
அவர்தான் உங்களுக்குத் தீர்ப்பு சொல்லப்போகிறார்; அதுவரை பொறுமையோடு காத்திருங்கள்.+
15 நீங்கள் அவசரப்பட்டுப் பேசியதை அவர் பெரிதுபடுத்தவில்லை.கோபத்தோடு உங்களைத் தண்டிக்கவும் இல்லை.+
16 யோபுவே, நீங்கள் தேவையில்லாமல் நிறைய பேசிவிட்டீர்கள்.அறிவில்லாமல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டீர்கள்”+ என்று சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ ஒருவேளை, “கடவுளுக்கு என்ன பிரயோஜனம்?”