கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 5:1-13

5  உங்கள் மத்தியில் பாலியல் முறைகேடு*+ நடப்பதாகக் கேள்விப்பட்டேன்; ஒருவன் தன்னுடைய அப்பாவின் மனைவியை வைத்திருக்கிறானாம்;+ இப்படிப்பட்ட பாலியல் முறைகேடு* மற்ற தேசத்து மக்கள் மத்தியில்கூட நடப்பதில்லை.  இதற்காக நீங்கள் துக்கப்படாமல்,+ உங்களைக் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறீர்களா? அப்படிப்பட்ட காரியத்தைச் செய்தவனை உங்களைவிட்டு நீக்கியிருக்க வேண்டாமா?+  உடலால் உங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும், உள்ளத்தால் உங்கள் மத்தியில் இருக்கிறேன். அப்படி இருப்பதாகவே நினைத்து, அந்தக் காரியத்தைச் செய்தவனை நியாயந்தீர்த்துவிட்டேன்.  நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, நம் எஜமானாகிய இயேசுவிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றிருக்கிற நான் உள்ளத்தால் அங்கே இருப்பேன்.  அந்த மனிதனுடைய கெட்ட செல்வாக்கை ஒழிப்பதற்காக, அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்துவிடுங்கள்.+ அப்போதுதான், நம் எஜமானுடைய நாளில் சபையாரின் சிந்தை பாதுகாக்கப்படும்.+  நீங்கள் பெருமையடிப்பது நல்லதல்ல; புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் என்று உங்களுக்குத் தெரியாதா?+  நீங்கள் புளிப்பில்லாத புதிய மாவாய் இருப்பதற்காக, பழைய புளித்த மாவை எறிந்துவிடுங்கள். சொல்லப்போனால், நீங்கள் புளிப்பில்லாத மாவாகத்தான் இருக்கிறீர்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து+ பலியிடப்பட்டிருக்கிறாரே.+  அதனால், பஸ்கா பண்டிகையைப்+ பழைய புளித்த மாவை வைத்தோ, கெட்டகுணம், பொல்லாத்தனம் ஆகிய புளித்த மாவை வைத்தோ அனுசரிக்காமல், நேர்மை, உண்மை ஆகிய புளிப்பில்லாத ரொட்டிகளை வைத்து அனுசரிப்போமாக.  பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களோடு பழகுவதை நீங்கள் விட்டுவிட வேண்டுமென்று என்னுடைய கடிதத்தில் எழுதியிருந்தேன். 10  இருந்தாலும், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ பேராசைப்படுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள், சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறவர்கள் ஆகியோரோடு பழகுவதை அடியோடு விட்டுவிட வேண்டுமென்று நான் எழுதவில்லை. அப்படியானால், நீங்கள் இந்த உலகத்தைவிட்டே வெளியேற வேண்டியிருக்கும்.+ 11  ஆனால், சகோதரன் என்று அழைக்கப்படுகிற எவனும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவனாகவோ பேராசைப்படுகிறவனாகவோ+ சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறவனாகவோ சபித்துப் பேசுகிறவனாகவோ* குடிகாரனாகவோ+ கொள்ளையடிக்கிறவனாகவோ+ இருந்தால், அப்படிப்பட்டவனோடு பழகுவதை விட்டுவிட வேண்டும்+ என்றுதான் இப்போது நான் உங்களுக்கு எழுதுகிறேன்; அப்படிப்பட்டவனோடு சேர்ந்து நீங்கள் சாப்பிடவும் கூடாது. 12  சபைக்கு வெளியே இருக்கிறவர்களை நியாயந்தீர்ப்பது என் வேலையா? வெளியே இருக்கிறவர்களைக் கடவுளே நியாயந்தீர்க்கிறார்.+ 13  உள்ளே இருக்கிறவர்களை நீங்கள்தானே நியாயந்தீர்க்க வேண்டும்? அதனால், “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறவனாகவோ.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா