2 சாமுவேல் 23:1-39

23  கடைசியாக தாவீது சொன்னது இதுதான்:+ “ஈசாயின் மகன் தாவீது சொன்ன செய்தி,+மிகவும் உயர்த்தப்பட்டவனின் வார்த்தை,+இவன் யாக்கோபின் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவன்,+இஸ்ரவேலின் பாடல்களை இனிமையாகப் பாடும்+ பாடகன்.   யெகோவாவின் சக்தி என் மூலம் பேசியது;+அவருடைய வார்த்தை என் நாவில் இருந்தது.+   இஸ்ரவேலின் கடவுள் பேசினார்;இஸ்ரவேலின் கற்பாறை+ என்னிடம் சொன்னார்:‘மனிதர்கள்மீது ஆட்சி செய்கிறவன் நீதியாக நடந்தால்,+கடவுளுக்குப் பயந்து ஆட்சி செய்தால்,+   அந்த ஆட்சி மேகம் இல்லாத வானில் பிரகாசிக்கிறகாலைநேர வெளிச்சம்போல் இருக்கும்,+ மழை ஓய்ந்த பின்பு, மண்ணிலிருந்து பசும்புல்லைத் துளிர்க்க வைக்கிறசூரிய ஒளிபோல் இருக்கும்.’+   என் வம்சமும் கடவுளுக்கு முன்னால் அப்படித்தானே இருக்கும்? அவர்தான் என்னோடு நிரந்தர ஒப்பந்தம் செய்திருக்கிறாரே;+அதைக் கச்சிதமாய், கவனமாய்த் தயார்படுத்தியிருக்கிறாரே. அது எனக்கு முழுமையான மீட்பும் அளவில்லாத ஆனந்தமும் அளிக்கும்;அதனால்தானே என் வம்சத்தை அவர் செழித்தோங்கச் செய்கிறார்?+   ஒன்றுக்கும் உதவாத ஆட்களெல்லாம் முட்செடிகள்போல் தூக்கியெறியப்படுவார்கள்,+அவற்றை யாராலும் வெறும் கையால் எடுக்க முடியாதே.   அவற்றை ஒருவன் தொட வேண்டுமென்றால்அவனுக்கு இரும்புக் கருவிகளும் ஈட்டியும் வேண்டும்.அவை இருக்கும் இடத்திலேயே அவற்றை முற்றிலும் சுட்டெரித்துவிட வேண்டும்.”  தாவீதுடன் இருந்த மாவீரர்களின் பெயர்கள்:+ தக்கெமோனியனான யோசேப்-பாசெபெத், அவர் மூன்று மாவீரர்களில் ஒருவர்;+ அவர்தான் அந்த மாவீரர்களுக்குத் தலைவர். ஒரு சமயம், அவர் தன்னுடைய ஈட்டியால் 800 பேரைக் கொன்றுபோட்டார்.  அவருக்கு அடுத்த இடத்தில், அகோகியின் பேரனும் தோதோவின்+ மகனுமான எலெயாசார்+ இருந்தார். ஒருசமயம், இஸ்ரவேலர்களோடு போர் செய்ய பெலிஸ்தியர்கள் வந்தார்கள். தாவீதுடன் இருந்த மாவீரர்கள் மூன்று பேரும் பெலிஸ்தியர்களுக்குச் சவால் விட்டார்கள். அவர்களில் இந்த எலெயாசாரும் ஒருவர். ஆனால், மற்ற இஸ்ரவேல் வீரர்கள் பின்வாங்கினார்கள். 10  அப்போது எலெயாசார் துணிந்துநின்று சண்டைபோட்டார், பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். கை ஓய்ந்துபோகும்வரை அவர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே இருந்தார். வாளைப் பிடித்துப் பிடித்து அவருடைய கையே விறைத்துப்போனது.+ அவர்களுக்கு யெகோவா அன்று மாபெரும் வெற்றியைத் தந்தார்.+ கொல்லப்பட்ட ஆட்களிடமிருந்து கொள்ளையடிப்பதற்காக எலெயாசாரின் பின்னால் வீரர்கள் போனார்கள். 11  அவருக்கு அடுத்த இடத்தில் ஆராரியனான ஆகேயின் மகன் சம்மா இருந்தார். ஒருநாள், லேகி என்ற இடத்தில் பெலிஸ்தியர்கள் திரண்டு வந்தார்கள். அங்கே இருந்த வயலில் பயறு செழித்து விளைந்திருந்தது. பெலிஸ்தியர்களைப் பார்த்து வீரர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். 12  ஆனால், அவர் அந்த வயல் நடுவில் நின்று அதைப் பாதுகாத்தார். பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டே இருந்தார். அன்று அவர் மூலம் யெகோவா மாபெரும் வெற்றியைத் தந்தார்.+ 13  அறுவடை சமயத்தில் 30 தலைவர்களில் மூன்று பேர் அதுல்லாம் குகையிலிருந்த தாவீதிடம் போனார்கள்.+ பெலிஸ்தியர்களின் படையோ ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாம்போட்டிருந்தது.+ 14  அப்போது, தாவீது பாதுகாப்பான ஓர் இடத்தில் இருந்தார்.+ பெலிஸ்தியர்களின் புறக்காவல் படை ஒன்று பெத்லகேமில் இருந்தது. 15  அப்போது தாவீது, “பெத்லகேம் நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீரைக் குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று ஏக்கத்தோடு சொன்னார். 16  உடனே அந்த மூன்று மாவீரர்களும் பெலிஸ்தியர்களோடு சண்டை போட்டுக்கொண்டே அவர்களுடைய முகாமுக்குள் நுழைந்து பெத்லகேம் நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து, யெகோவாவுக்காகக் கீழே ஊற்றிவிட்டார்.+ 17  அப்போது தாவீது, “யெகோவாவே, இப்படிச் செய்வதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! எனக்காக உயிரையே பணயம் வைத்துப் போன என் வீரர்களின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டுமா?”+ என்றார். இப்படி, அந்தத் தண்ணீரைக் குடிக்க மறுத்துவிட்டார். இவையே அந்த மூன்று மாவீரர்கள் செய்த செயல்கள். 18  செருயாவின்+ மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாய்+ இன்னும் மூன்று மாவீரர்களுக்குத் தலைவராக இருந்தார்; அவர் தன்னுடைய ஈட்டியால் 300 பேரைக் கொன்றுபோட்டார். முதல் மூன்று மாவீரர்களைப் போலவே இவரும் புகழ் பெற்றிருந்தார்.+ 19  மாவீரர்கள் மூன்று பேரில் தனிச்சிறப்பு பெற்றவராகவும் தலைவராகவும் இருந்தாலும், முதல் மூன்று மாவீரர்களுக்கு அவர் சமமாக இல்லை. 20  யோய்தாவின் மகன் பெனாயா+ அஞ்சாநெஞ்சம் உள்ளவர். கப்செயேலில்+ வீரச்செயல்கள் பலவற்றைச் செய்திருந்தார். மோவாபியனான அரியேலின் இரண்டு மகன்களைக் கொன்றுபோட்டார். ஒருநாள், பனி பெய்துகொண்டிருந்தபோது தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தைக் கொன்றுபோட்டார்.+ 21  அதோடு, மிக மிக உயரமாக இருந்த ஓர் எகிப்தியனையும் கொன்றுபோட்டார். அந்த எகிப்தியன் கையில் ஈட்டி இருந்தது. ஆனாலும், பெனாயா ஒரு கம்பை எடுத்துக்கொண்டு அவனை எதிர்த்துச் சண்டைபோடப் போனார். அவனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அந்த ஈட்டியாலேயே அவனைக் குத்திக் கொன்றார். 22  இவையெல்லாம் யோய்தாவின் மகன் பெனாயாவின் செயல்கள். முதல் மூன்று மாவீரர்களைப் போலவே இவரும் புகழ் பெற்றிருந்தார். 23  மாவீரர்கள் 30 பேரைவிட இவர் தனிச்சிறப்பு பெற்றிருந்தார். ஆனால், முதல் மூன்று மாவீரர்களுக்கு இவர் சமமாக இல்லை. ஆனாலும், தாவீது இவரைத் தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவராக நியமித்தார். 24  யோவாபின் சகோதரன் ஆசகேலும்+ அந்த மாவீரர்கள் 30 பேரில் ஒருவர். அவர்கள் யாரென்றால்: பெத்லகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,+ 25  ஆரத்தியனான சம்மா, ஆரத்தியனான எலிக்கா, 26  பல்தியனான ஏலெஸ்,+ தெக்கோவா ஊரைச் சேர்ந்த இக்கேசின் மகன் ஈரா,+ 27  ஆனதோத்தியனான+ அபியேசர்,+ உஷாத்தியனான மெபுன்னாய், 28  அகோகியனான சால்மோன், நெத்தோபாத்தியனான மகராய்,+ 29  நெத்தோபாத்தியனான பாணாவின் மகன் ஏலேப், பென்யமீன் கோத்திரத்தாருடைய கிபியாவைச் சேர்ந்த ரிபாயின் மகன் ஈத்தாய், 30  பிரத்தோனியனான பெனாயா,+ காயாஸ் பள்ளத்தாக்கை*+ சேர்ந்த ஹித்தாய், 31  அர்பாத்தியனான அபி-அல்பொன், பருமியனான அஸ்மாவேத், 32  சால்பீமியனான எலியாபா, யாசேனின் மகன்கள், யோனத்தான், 33  ஆராரியனான சம்மா, ஆராரியனான ஷாராரின் மகன் அகியாம், 34  மாகாத்தியனின் மகனாகிய அகஸ்பாயின் மகன் எலிப்பேலேத், கீலோ ஊரைச் சேர்ந்த அகித்தோப்பேலின்+ மகன் எலியாம், 35  கர்மேல் ஊரைச் சேர்ந்த எஸ்ரோ, அராபியனான பாராய், 36  சோபாவைச் சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத் கோத்திரத்தானான பானி, 37  அம்மோனியனான சேலேக், பேரோத்தியனும் செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுதங்களைச் சுமப்பவனுமான நகராய், 38  இத்தரியனான ஈரா, இத்தரியனான+ காரேப், 39  ஏத்தியனான உரியா.+ மொத்தம் 37 பேர்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா