2 நாளாகமம் 2:1-18

2  யெகோவாவின் பெயருக்காக ஓர் ஆலயத்தையும் தனக்காக ஓர் அரண்மனையையும் கட்டச்+ சொல்லி சாலொமோன் கட்டளையிட்டார்.+  சுமை சுமக்க 70,000 ஆண்களையும் மலைகளில் கற்களை வெட்டிச் செதுக்க 80,000 ஆண்களையும் வேலைக்கு வைத்தார்;+ இவர்களை மேற்பார்வை செய்ய 3,600 பேரை நியமித்தார்.+  தீருவின் ராஜாவான ஈராமுக்கு சாலொமோன் செய்தி அனுப்பினார்;+ “அரண்மனை கட்ட என் அப்பா தாவீதுக்கு தேவதாரு மரங்களை அனுப்பி வைத்ததுபோல் எனக்கும் அனுப்பி வையுங்கள்.+  இப்போது என்னுடைய கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கப்போகிறேன்.* அவருடைய சன்னிதியில் நறுமண தூபப்பொருளை எரிப்பதற்காகவும்+ படையல் ரொட்டிகளை எப்போதும் வைப்பதற்காகவும்+ அதைக் கட்டப்போகிறேன்; காலையிலும் மாலையிலும்+ ஓய்வுநாட்களிலும்+ மாதப்பிறப்பு* நாட்களிலும்+ பண்டிகை நாட்களிலும்+ எங்கள் கடவுளான யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்துவதற்காக அதைக் கட்டப்போகிறேன். ஏனென்றால், இது இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிரந்தரக் கட்டளை.  மற்ற எல்லா கடவுள்களையும்விட எங்களுடைய கடவுள் மிக மிக உயர்ந்தவர். அதனால், நான் அவருக்குப் பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டப்போகிறேன்.  அற்ப மனிதனால் அவருக்கு ஒரு ஆலயம் கட்ட முடியுமா? வானங்கள், ஏன் வானாதி வானங்கள்கூட, அவருக்குப் போதாதே.+ அப்படியிருக்கும்போது, அவர் குடியிருப்பதற்காக ஒரு ஆலயத்தை என்னால் கட்ட முடியுமா? அவர் முன்னால் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்வதற்கான ஒரு இடத்தைத்தான் என்னால் கட்ட முடியும்.  அதனால் தங்கம், வெள்ளி, செம்பு,+ இரும்பு, ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நிற நூல், நீல நிற நூல் ஆகியவற்றை வைத்து வேலை செய்வதில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வையுங்கள்; கலைநயத்துடன் செதுக்கவும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்; என் அப்பா தாவீது நியமித்த திறமையான கைத்தொழிலாளிகளோடு சேர்ந்து யூதாவிலும் எருசலேமிலும் அவன் வேலை செய்வான்.+  லீபனோனில் இருந்து தேவதாரு மரங்களையும் ஆபால் மரங்களையும்+ சந்தன மரங்களையும்+ எனக்கு அனுப்பி வையுங்கள். லீபனோனிலுள்ள மரங்களை வெட்டுவதில் உங்களுடைய ஆட்கள் திறமைசாலிகள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.+ ஏராளமான மரங்களைத் தயார் செய்வதற்காக,  உங்களுடைய ஆட்களோடு சேர்ந்து என்னுடைய ஆட்களும் வேலை செய்வார்கள்;+ ஏனென்றால், நான் மிகவும் பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டப்போகிறேன். 10  மரம் வெட்டுகிற உங்களுடைய ஆட்களின் சாப்பாட்டுக்காக 20,000 கோர் அளவு* கோதுமையும் 20,000 கோர் அளவு பார்லியும் 20,000 ஜாடி* திராட்சமதுவும் 20,000 ஜாடி எண்ணெயும் அனுப்பி வைக்கிறேன்”+ என்று சொன்னார். 11  சாலொமோனுக்கு தீருவின் ராஜாவான ஈராம் பதில் எழுதி அனுப்பினார். அதில், “யெகோவா அவருடைய மக்களை மிகவும் நேசிக்கிறார்; அதனால்தான், உங்களை அவர்களுக்கு ராஜாவாக்கியிருக்கிறார். 12  வானத்தையும் பூமியையும் படைத்த இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புகழ்கிறேன். அவர் தாவீது ராஜாவுக்கு ஞானமுள்ள மகனைக் கொடுத்திருக்கிறார்.+ உங்களுக்கு விவேகத்தையும் புரிந்துகொள்ளும் திறனையும் தந்திருக்கிறார்.+ நீங்கள் யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தையும் உங்களுக்கு ஒரு அரண்மனையையும் கட்டுவீர்கள். 13  கைவேலைப்பாடுகள் செய்வதில் திறமைசாலியான ஈராம்-அபியை இப்போது அனுப்பி வைக்கிறேன். இந்த வேலைகளைச் செய்வதில் அவர் கெட்டிக்காரர்.+ 14  அவருடைய அம்மா தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவர், அப்பா தீருவைச் சேர்ந்தவர். தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, கற்கள், மரங்கள், ஊதா நிற கம்பளி நூல், நீல நிற நூல், கருஞ்சிவப்பு நிற நூல், உயர்தர துணி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேலை செய்வதில் அவர் அனுபவசாலி.+ எல்லாவித செதுக்கு வேலையையும் செய்வார்; எந்த வரைபடத்தைக் கொடுத்தாலும் அதன்படியே செய்துகொடுப்பார்.+ உங்களுடைய திறமையான கைத்தொழிலாளிகளோடும், என் எஜமானாகிய உங்கள் அப்பா தாவீதுடைய திறமையான கைத்தொழிலாளிகளோடும் சேர்ந்து அவர் வேலை செய்வார். 15  எஜமானே, நீங்கள் சொன்னபடியே கோதுமை, பார்லி, எண்ணெய், திராட்சமது ஆகியவற்றை என் ஆட்களுக்குக் கொடுங்கள்.+ 16  உங்களுக்கு எத்தனை மரங்கள் தேவைப்பட்டாலும் லீபனோனிலிருந்து வெட்டித் தருகிறோம்.+ அவற்றை ஒன்றாகக் கட்டி கடல் வழியே யோப்பாவுக்குக் கொண்டுவருகிறோம்.+ அவற்றை நீங்கள் அங்கிருந்து எருசலேமுக்குக் கொண்டுபோகலாம்”+ என்று எழுதியிருந்தார். 17  பின்பு, மற்ற தேசத்தைச் சேர்ந்த ஆண்கள் எத்தனை பேர் இஸ்ரவேலில் இருக்கிறார்கள் என்பதை சாலொமோன் கணக்கெடுத்தார்.+ இதற்கு முன்பு அவருடைய அப்பா தாவீது கணக்கெடுத்திருந்தார்.+ அவர்கள் மொத்தம் 1,53,600 பேர் இருந்தார்கள். 18  அவர்களில் 70,000 பேரைச் சுமை சுமக்கவும், 80,000 பேரை மலைகளில் கற்களை வெட்டிச் செதுக்கவும் நியமித்தார்.+ இவர்களை மேற்பார்வை செய்ய 3,600 பேரை நியமித்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “முதலாம் பிறை.”
நே.மொ., “புனிதப்படுத்தப்போகிறேன்.”
ஒரு கோர் என்பது 220 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
மூலமொழியில், “பாத்.” ஒரு பாத் என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா