Skip to content

பலதார மணம் செய்வது சரியா?

பலதார மணம் செய்வது சரியா?

பைபிள் தரும் பதில்

 ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்வதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் கடவுள் அனுமதித்தார். (ஆதியாகமம் 4:19; 16:1-4; 29:18-29) ஆனால், இந்த வழக்கத்தை ஆரம்பித்து வைத்தது கடவுள் அல்ல. ஆதாமுக்கு அவர் ஒரேவொரு மனைவியைத்தான் கொடுத்தார்.

 ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் கடவுள் ஆரம்பத்தில் ஏற்படுத்திய ஒழுக்கநெறி. அதைத் திரும்பவும் நிலைநாட்ட இயேசு கிறிஸ்துவுக்குக் கடவுள் அதிகாரமளித்தார். (யோவான் 8:28) திருமண பந்தத்தைப் பற்றி இயேசுவிடம் சிலர் கேட்டபோது, ‘கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் . . . “இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்” என்று அவர் சொன்னார்’ என்றார்.—மத்தேயு 19:4, 5.

 சில காலம் கழித்து, இயேசுவின் சீஷர் ஒருவர் கடவுளுடைய தூண்டுதலால் இப்படி எழுதினார்: “ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு மனைவி இருக்கட்டும், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கணவன் இருக்கட்டும்.” (1 கொரிந்தியர் 7:2) அதோடு, கிறிஸ்தவ சபையில் விசேஷப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிற திருமணமான ஓர் ஆண் “ஒரே மனைவியை உடையவராக” இருக்க வேண்டும் என்றும் பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 3:2, 12.