Skip to content

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

 பைபிளைப் பற்றி உங்களுக்குச் சொல்லித்தர யெகோவாவின் சாட்சிகள் ஓர் அருமையான ஏற்பாட்டை வைத்திருக்கிறார்கள். எங்கள் பைபிள் படிப்பு ஏற்பாடு இதற்கெல்லாம் உங்களுக்கு உதவி செய்யும்:

  •   சந்தோஷமாக வாழ்வதற்கு

  •   கடவுளுடைய நண்பராவதற்கு

  •   எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு

இந்தப் பக்கத்தில்

 பைபிள் படிப்பில் என்ன நடக்கும்?

 பைபிள் சொல்லும் விஷயங்களை ஒவ்வொரு தலைப்பாகப் படித்துப் புரிந்துகொள்ள ஒரு யெகோவாவின் சாட்சி உங்களுக்கு உதவி செய்வார். இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி அவர் உங்களோடு கலந்துபேசுவார். பைபிளில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்றும், அவை உங்களுக்கு எப்படி உதவி செய்யும் என்றும் நீங்கள் படிப்படியாகக் கற்றுக்கொள்வீர்கள். இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, இந்த வீடியோவைப் பாருங்கள்.

 பைபிள் படிப்புக்கு நான் பணம் கட்ட வேண்டுமா?

 வேண்டாம். இயேசு தன் சீஷர்களிடம், “இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று சொன்னார். (மத்தேயு 10:8) யெகோவாவின் சாட்சிகள் அவர் சொன்னது போலவே செய்கிறார்கள். இந்தப் படிப்புக்காக நாங்கள் உங்களுக்கு தரும் பைபிளும், இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகமும்கூட இலவசம்தான்.

 படிப்பு எவ்வளவு நாட்கள் நடத்தப்படும்?

 மொத்தமாக 60 பாடங்களை நாம் படிப்போம். ஆனால், எவ்வளவு வேகமாகப் படிக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். நிறைய பேர், வாரத்துக்கு ஓரிரண்டு பாடங்களைப் படிக்கிறார்கள்.

 படிப்பை நான் எப்படி ஆரம்பிக்கலாம்?

  1.  1. ஆன்லைன் படிவத்தை நிரப்புங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டபடி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்வதற்காக மட்டுமே உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துவோம்.

  2.  2. ஒரு யெகோவாவின் சாட்சி உங்களைத் தொடர்புகொள்வார். பைபிள் படிப்பு எப்படி நடக்கும் என்று அவர் உங்களுக்கு விளக்கிச் சொல்வார். அதோடு, உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அவர் பதில் சொல்வார்.

  3.  3. நீங்களும் அவரும் பேசி முடிவு பண்ணலாம். நீங்கள் நேரிலும் படிக்கலாம், டெலிபோன், வீடியோ கால், லெட்டர், அல்லது ஈமெயில் மூலமாகவும் படிக்கலாம். படிப்பு பொதுவாக ஒரு மணிநேரம் நடக்கும். ஆனால், படிக்கும் நேரத்தை உங்கள் வசதிக்கு ஏற்றபடி நீங்கள் கூட்டிக்கொள்ளலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம்.

 படிப்பு எப்படி இருக்கும் என்று முதலில் நான் பார்க்கலாமா?

 கண்டிப்பாக! அதற்கு ஆன்லைன் படிவத்தை நிரப்புங்கள். ஒரு யெகோவாவின் சாட்சி உங்களைத் தொடர்புகொள்ளும்போது, படிப்பு எப்படி இருக்கும் என்று நீங்கள் முதலில் பார்க்க விரும்புவதாகச் சொல்லுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி: ஓர் அறிமுகம்! என்ற சிறு புத்தகத்தைப் பயன்படுத்தி அவர் உங்களுக்குப் படிப்பை நடத்திக் காட்டுவார். அதில் மூன்று பாடங்கள்தான் இருக்கின்றன. படிப்பைத் தொடரலாமா வேண்டாமா என்று அதன் பிறகு நீங்கள் முடிவு செய்யலாம்.

 நான் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டால் யெகோவாவின் சாட்சியாக மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களா?

 இல்லை! பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லித்தர யெகோவாவின் சாட்சிகளுக்குப் பிடிக்கும்தான். ஆனால், எங்கள் மதத்தில் சேரச் சொல்லி நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. பைபிள் என்ன சொல்கிறது என்பதை மட்டும் நாங்கள் மரியாதையோடு எடுத்துச் சொல்கிறோம். (1 பேதுரு 3:15) அதை நம்பலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை அவரவருக்குத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறோம்.

 படிப்பில் என்னுடைய சொந்த பைபிளைப் பயன்படுத்தலாமா?

 தாராளமாக! உங்களுக்குப் பிடித்த எந்த பைபிள் மொழிபெயர்ப்பை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம். ரொம்பத் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் பயன்படுத்த நாங்கள் விரும்புகிறோம் என்பது உண்மைதான். ஆனால், நிறைய பேர் தங்களுக்குப் பழக்கமான மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தத்தான் விரும்புவார்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறோம்.

 என்னோடு சேர்ந்து படிக்க மற்றவர்களையும் நான் கூப்பிடலாமா?

 கண்டிப்பாக! உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லாரையுமே நீங்கள் கூப்பிடலாம், உங்கள் நண்பர்களைக்கூடக் கூப்பிடலாம்.

 முன்பு நான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்திருந்தால் இப்போது மறுபடியும் படிக்கலாமா?

 படிக்கலாம்! சொல்லப்போனால், முன்பைவிட இப்போது உங்களுக்கு இந்தப் படிப்பு ரொம்பப் பிடித்துப்போய்விடும். ஏனென்றால், படிக்கும் முறையை இந்தக் காலத்துக்கு ஏற்றபடி நாங்கள் அப்டேட் செய்திருக்கிறோம். எப்போதும்போல் படிப்பை நடத்தாமல், படிப்பவரிடம் நிறைய கலந்துபேசுவோம். நிறைய படங்களையும் வீடியோக்களையும்கூட இப்போது சேர்த்திருக்கிறோம்.

 யாரும் சொல்லித்தராமல் நானே சொந்தமாக பைபிளைப் படிக்க ஏதாவது வழி வைத்திருக்கிறீர்களா?

 ஆமாம்! பொதுவாக, ஒருவர் சொல்லித்தரும்போது நாம் நன்றாகக் கற்றுக்கொள்வோம். ஆனாலும், ஆரம்பத்தில் தாங்களே சொந்தமாகப் படிக்கத்தான் சிலர் விரும்புகிறார்கள். எங்கள் வெப்சைட்டில் “பைபிள் படிப்பு கருவிகள்” என்ற பக்கத்தில், பைபிளை நீங்களே படிக்க உதவும் கருவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இலவசமான அந்தக் கருவிகளில் சில இவைதான்: