Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 153

தைரியம் தாரும்!

தைரியம் தாரும்!

(2 ராஜாக்கள் 6:16)

  1. 1. துன்ப மேகம் சூழ,

    கலங்கி நிற்கிறேன்.

    வழி காட்டுவீர், இறைவா!

    உம் தோளில் சாய்கிறேன்.

    சோர்ந்துபோகும் நாளில்,

    சுமந்துகொள்கிறீர்.

    உங்கள் கண்மணியை போலே,

    எந்நாளும் காக்கிறீர்.

    (பல்லவி)

    யெகோவா, எம் விரோதிகள்

    அநேகரானாலும்

    எங்களோடிருப்பவர்கள்தான்

    அதிகம், அல்லவா?

    தைர்யம், தைர்யம் தாரும்

    சகித்து நிற்கவே.

    தைர்யம் தாரும் யெகோவா,

    வெற்றி அருகிலே!

  2. 2. நெஞ்சம் அஞ்சும்போது,

    தளர்ந்து போகிறேன்.

    அரணான கோட்டை நீரே,

    தஞ்சம் அடைகிறேன்.

    சாவைச் சந்தித்தாலும்,

    சிறைக்குச் சென்றாலும்

    என்ன துன்பம் நேரிட்டாலும்,

    மீட்பீர் விரைவிலே!

    (பல்லவி)

    யெகோவா, எம் விரோதிகள்

    அநேகரானாலும்

    எங்களோடிருப்பவர்கள்தான்

    அதிகம், அல்லவா?

    தைர்யம், தைர்யம் தாரும்

    சகித்து நிற்கவே.

    தைர்யம் தாரும் யெகோவா,

    வெற்றி அருகிலே!

    (பல்லவி)

    யெகோவா, எம் விரோதிகள்

    அநேகரானாலும்

    எங்களோடிருப்பவர்கள்தான்

    அதிகம், அல்லவா?

    தைர்யம், தைர்யம் தாரும்

    சகித்து நிற்கவே.

    தைர்யம் தாரும் யெகோவா,

    வெற்றி அருகிலே!

    தைர்யம் தாரும் யெகோவா,

    வெற்றி அருகிலே!