Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு—பைபிள் என்ன சொல்கிறது?

பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு—பைபிள் என்ன சொல்கிறது?

 மே 24, 2022 அன்று, அமெரிக்காவில் இருக்கிற டெக்சஸ் மாகாணத்தைச் சேர்ந்த யுவால்டே என்ற சின்ன டவுனில் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. “ராப் எலிமெண்டரி பள்ளியில் . . . 19 குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் துப்பாக்கி வைத்திருந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” என்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

 வேதனையான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற கொடூரமான பதற வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை நாம் கேள்விப்படுகிறோம். “போன வருஷம் மட்டுமே பள்ளிகளில் 249 தடவை துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. 1970-ல் இருந்து கணக்கிட்டால், போன வருஷம் நடந்த துப்பாக்கிச்சூடுதான் ரொம்ப அதிகம்” என்று யுஎஸ்ஏ டுடே சொன்னது.

 இந்த மாதிரியான கொடூரமான சம்பவங்கள் ஏன் நடக்கின்றன? இவற்றை நாம் எப்படி சமாளிக்கலாம்? வன்முறை இல்லாத ஒரு காலம் வருமா? இதுபோன்ற கேள்விகளுக்கு பைபிள் பதில் தருகிறது.

இந்த உலகம் ஏன் மோசமாகிக்கொண்டே போகிறது?

  •    நாம் வாழ்கிற இந்தக் காலப்பகுதியை ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்கிறது. இந்த சமயத்தில் இருக்கிற மக்கள் கொஞ்சம்கூட ‘பந்தபாசம் இல்லாமல்’ “கொடூரமானவர்களாக” இருப்பார்கள் என்று அது சொல்கிறது. அதனால்தான், நம்மைச் சுற்றி கொஞ்சம்கூட ஈவிரக்கமே இல்லாத கொடூரமான சம்பவங்கள் நடக்கின்றன. இந்த மாதிரி நடந்துகொள்கிறவர்கள் “மேலும் மேலும் மோசமாவார்கள்” என்றும் பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5, 13) இதைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள “ஏன் இந்தளவு வேதனை?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

 ‘பள்ளியில் நடக்கிற துப்பாக்கிச்சூடுகள் மாதிரியான கொடூர சம்பவங்களை கடவுள் ஏன் தடுப்பதில்லை?’ என்று சிலர் யோசிக்கிறார்கள். இதற்குப் பதில் தெரிந்துகொள்ள, “நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

இந்த மாதிரியான பயங்கரமான சம்பவங்களை நாம் எப்படி சமாளிக்கலாம்?

  •    “அன்று எழுதப்பட்ட வேதவசனங்கள் எல்லாம் நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன; அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன. . . . நம்மை ஆறுதல்படுத்துகின்றன.”—ரோமர் 15:4.

 வன்முறை நிறைந்த இந்த உலகத்தில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்க பைபிளில் இருக்கிற ஆலோசனைகள் உதவி செய்யும். இதைப் பற்றி தெரிந்துகொள்ள, “வன்முறை இல்லாத உலகம் வருமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

 இந்த மாதிரி பயங்கரமான செய்திகளைக் கேட்டு பிள்ளைகள் பயந்துவிடாமல் இருப்பதற்கு பெற்றோர்கள் எப்படி உதவலாம் என்று தெரிந்துகொள்ள, “பதற வைக்கும் செய்திகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்திடுங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

வன்முறை இல்லாத ஒரு உலகம் வருமா?

  •    “கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:14.

  •    “அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள். ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள். ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.”—மீகா 4:3.

 மனிதர்களால் செய்ய முடியாததை கடவுள் சீக்கிரத்தில் செய்வார். அவருடைய அரசாங்கத்தின் மூலமாக எல்லா போர்க் கருவிகளையும் துவம்சம் செய்வார். வன்முறையான செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார். கடவுளுடைய அரசாங்கம் இன்னும் என்னவெல்லாம் சாதிக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, “அமைதி தவழும் உலகினிலே!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.