Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிக்க டிப்ஸ்

படிக்க டிப்ஸ்

நம்முடைய பாடல்களை மனப்பாடம் செய்யுங்கள்

“நான் ரொம்ப சோர்ந்துபோய் இருக்கும்போது பிராட்காஸ்டிங் பாடல்களை வைத்து யெகோவா என்னை பலப்படுத்துகிறார்.”—லோரின், அமெரிக்கா.

‘பக்திப்பாடல்களை’ பாடுவது யெகோவாவின் வணக்கத்தில் எப்போதுமே ஒரு முக்கிய பாகமாக இருந்திருக்கிறது. (கொலோ. 3:16) இந்தப் பாடல்களை நன்றாக மனப்பாடம் செய்துகொண்டால், பாட்டு புத்தகமோ மொபைல் ஃபோனோ இல்லாத சமயங்களில்கூட நம்மால் பாட முடியும். மனப்பாடம் செய்ய உங்களுக்கு சில டிப்ஸ்:

  • பாடல் வரிகளைக் கவனமாக வாசித்து அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துவைத்திருந்தால் அதை ஞாபகம் வைத்துக்கொள்வது சுலபம். சிறப்பு பாடல்கள்... குழந்தைகளுக்கான பாடல்கள்... என எல்லா பாடல்களின் வரிகளும் jw.org வெப்சைட்டில் இருக்கிறது. அதை பார்க்க, லைப்ரரி > இசை என்ற பகுதிக்குப் போங்கள்.

  • பாடல் வரிகளை எழுதிப் பாருங்கள். எழுதிப் பார்ப்பது பாடல் வரிகளை மனதில் பதிய வைக்கும்.—உபா. 17:18.

  • சத்தமாக பாடிப் பழகுங்கள். திரும்பத் திரும்ப பாடல் வரிகளைச் சத்தமாக வாசித்தோ பாடியோ பாருங்கள்.

  • எந்த அளவுக்கு ஞாபகம் இருக்கிறது என்று பாருங்கள். பாடல் வரிகளைப் பார்க்காமல் பாடுங்கள். பிறகு, சரியாக பாடினீர்களா என்று வரிகளை வைத்துப் பாருங்கள்.