Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை

ஏன் வாழ வேண்டும்?

ஏன் வாழ வேண்டும்?

துருதுரு அனிதாவை * பார்த்தால் எல்லோருக்கும் பிடிக்கும். அவள் ரொம்ப புத்திசாலி, கலகலவென இருப்பாள். ஆனால் அனிதாவின் அடிமனதில், தான் எதற்கும் லாயக்கற்றவள் என்ற எண்ணம் இருந்தது; இது அவளுக்கு நாள்கணக்கில், வாரக்கணக்கில் ஏன், மாதக்கணக்கில்கூட நீடித்தது. அவள் சொல்கிறாள், “செத்துட்டா நல்லா இருக்கும்னு நான் தினமும் யோசிப்பேன். நான் செத்தா யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லைன்னு தோனும்.”

‘இந்தியாவில், 2012-ல் மட்டும் 1,35,445 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். சராசரியாக, ஒரு மணிநேரத்திற்கு 15 பேர் அல்லது ஒரு நாளுக்கு 371 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்.’—தி ஹிந்து, இந்தியா

அனிதாவுக்குத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இருந்தாலும், உயிர்வாழ்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று அவளுக்குத் தோன்றும். அவள் சொல்கிறாள்: “நான் ஏதாவது ஒரு விபத்துல செத்துட்டா நல்லா இருக்கும். நான் சாவ நினைச்சு பயப்படல, அது எப்போ வரும்னு காத்திட்டு இருக்கேன்.”

நிறைய பேர் அனிதாவைப் போல உணர்கிறார்கள். இன்னும் சிலர் தற்கொலை செய்ய நினைத்திருக்கிறார்கள், அதற்காகத் துணிந்திருக்கிறார்கள். உண்மையில் யாருமே தற்கொலை செய்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால், தங்களுடைய பிரச்சினைக்கு முடிவுகட்டுவதற்காக தங்கள் வாழ்க்கைக்கே முடிவுகட்டிவிடுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாவதற்குக் காரணம் தேடும் இவர்கள் வாழ்வதற்குக் காரணம் தேடினால் நிச்சயம் இந்த முடிவுக்கு வரமாட்டார்கள்.

வாழ மூன்று காரணங்கள், இதோ...

^ பாரா. 3 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.