Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க . . .

அசுத்தமான பழக்கங்களை விட்டுவிட பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்

அசுத்தமான பழக்கங்களை விட்டுவிட பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்

ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருக்கிறவர்களால் மட்டும்தான் யெகோவாவுடைய நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும். (1பே 1:14-16) பைபிள் மாணவர்கள் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள், அவர்களுக்குப் பணக் கஷ்டமும் வராது.

ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவா என்னென்ன சட்டங்களைக் கொடுத்திருக்கிறார், அவற்றை ஏன் கொடுத்திருக்கிறார், அந்த சட்டங்களால் என்ன நன்மை என்பதையெல்லாம் மாணவர்களுக்கு விளக்கமாகச் சொல்லுங்கள். யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள். அப்போதுதான், யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி அவர்களால் நடக்க முடியும். (எபே 4:22-24) அவர்களுக்குள் ஊறிப்போயிருக்கிற கெட்ட பழக்கங்களை யெகோவாவுடைய உதவியால் கண்டிப்பாக விட்டுவிட முடியும் என்பதைச் சொல்லுங்கள். (பிலி 4:13) தவறு செய்வதற்கான எண்ணம் வரும்போது யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்ய சொல்லுங்கள். என்னென்ன சூழ்நிலைகள் தவறு செய்வதற்கான ஆசையைத் தூண்டிவிடலாம், அவற்றை எப்படித் தவிர்க்கலாம் என்றெல்லாம் சொல்லிக்கொடுங்கள். கெட்டதை விட்டுவிட்டு நல்லதைச் செய்ய அவர்களை உற்சாகப்படுத்துங்கள். யெகோவாவின் உதவியோடு உங்கள் பைபிள் மாணவர்கள் மாற்றங்களைச் செய்வதைப் பார்க்கும்போது நீங்கள் ரொம்ப சந்தோஷப்படுவீர்கள்.

உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்—அசுத்தமான பழக்கங்களை விட்டுவிட என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ஜேட்மீது நம்பிக்கை இருப்பதை மூப்பர்களும் நீட்டாவும் எப்படிக் காட்டினார்கள்?

  • ஜேடுக்கு நீட்டா வேறு என்ன உதவிகளைச் செய்தாள்?

  • யெகோவாவுடைய உதவி கிடைப்பதற்காக ஜேட் என்ன செய்தாள்?