Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓடோடி வந்திடும் பூஞ்சோலை! (2023 மாநாட்டுப் பாடல்)

ஓடோடி வந்திடும் பூஞ்சோலை! (2023 மாநாட்டுப் பாடல்)

(ஆபகூக் 2:3)

டவுன்லோட்:

  1. 1. வண்ண பூமியை தந்த தேவனே,

    உம் எண்ணம் போலே, பூமி இன்றில்லையே!

    கண்ணீரில் மூழ்கி சாயம் போனதே!

    வண்ணம் சேர்க்கத்தான் நீர் காத்திருக்கிறீர்.

    (பல்லவி)

    யெகோவா தேவனே, பொறுமை தாருமே

    மன்றாடுதே நெஞ்சமே

    ஓர் கண நேரமும் தாமதம் ஆகாதே

    ஓடோடி வந்திடுமே

    பூஞ்சோலை இங்கே!

  2. 2. கல்லறையிலே தூங்கும் நல்லோரை

    ஓர் கல்வெட்டு போல் உம் நெஞ்சில் வைத்தீரே

    நெஞ்சில் வாழ்வோரை நேரில் பார்க்கவே,

    அப்பா உம் கண் போல் எம் கண்ணும் ஏங்குதே

    (பல்லவி)

    யெகோவா தேவனே, பொறுமை தாருமே

    மன்றாடுதே நெஞ்சமே

    ஓர் கண நேரமும் தாமதம் ஆகாதே

    ஓடோடி வந்திடுமே

    பூஞ்சோலை இங்கே!

  3. 3. சேற்றில் பூத்திடும் தாமரை போலே

    இன்னும் பூமியில் பூ உள்ளங்கள் உண்டே

    வாடும் முன்னரே தேட சொல்கிறீர்

    ஜீவன் காக்கவே நீர் காத்திருக்கிறீர்

    (பல்லவி)

    யெகோவா தேவனே, பொறுமை தாருமே

    மன்றாடுதே நெஞ்சமே

    ஓர் கண நேரமும் தாமதம் ஆகாதே

    ஓடோடி வந்திடுமே

    பூஞ்சோலை இங்கே!

    தாரும் பொறுமை தேவா

(பாருங்கள்: கொலோ. 1:11)