Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் வீட்டிலே...!

யெகோவாவின் வீட்டிலே...!

டவுன்லோட்:

  1. 1. என் நெஞ்சம் எனை பந்தாடுது,

    யாரோ எந்தன் சொந்தம், இமைகள் தேடுது.

    தாய் வீட்டைத் தேடும் நெஞ்சின் ஏக்கம் என்னுள்ளே,

    சொந்தம் என்றே தான், நான் யாரை சொல்லுவேன்?

  2. 2. நான் தேடும் சொந்தம், கண்டேன் இங்கே

    வான் மழையாய் அன்பைத் தூவும், குடும்பம் நான் கண்டேன்.

    வாசம் வீசும் காட்டுப் பூவாய் பூக்கிறேன்—

    என்னை நான் கண்டேன், இங்கே, நம் தேவன் வீட்டிலே!

    (பிரிட்ஜ்)

    என் அப்பா அம்மா அண்ணா தங்கை எல்லாம் நூறாச்சு

    உறவாக ஆயாச்சு, ஏக்கம் போயாச்சு.

    தேச பேதம் இங்கில்லை, விரோதங்கள் இல்லை

    இங்கே வாழத்தான், நெஞ்சில் ஆசை தீயாச்சு.

  3. 3. செம்பூவின் இதழ் மேல் வீசிடும்

    பூங்காற்றாய் அன்பு மோதும் பேரின்பம் இங்குதான்.

    ஒன்றா ரெண்டா இந்த சொந்தம் ஓர் கடல்

    நானும் ஒன்றானேன் யெகோவாவின் வீட்டிலே

    (பிரிட்ஜ்)

    தேச பேதம் இங்கில்லை, விரோதங்கள் இல்லை

    வாழ வேண்டும்தான், யெகோவாவின் வீட்டில் நான்!

  4. 4. ‘என் சாயல் நீயே, உனை நான் மறவேன்,

    என் வாசல் வரவேண்டும்’ - நம் தந்தை சொன்னாரே!

    முடிவே இல்லாத வாழ்வை வாழ்க்கையில்

    பிள்ளைகள் ஆவோம், யெகோவாவின் வீட்டிலே,

    நாம்தான், யெகோவாவின் வீட்டிலே!

    வீட்டிலே!

    வீட்டிலே!