Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நிறைவான வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறதா?

நிறைவான வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறதா?

நாம் முந்தின கட்டுரைகளில் பார்த்ததுபோல் நிறைவான வாழ்க்கைக்காக மக்கள் நிறைய விஷயங்களைச் செய்கிறார்கள். சிலர், விதியை நம்புகிறார்கள். இன்னும் சிலர், கல்வி... சொத்துப்பத்துகள்... பின்னால் ஓடுகிறார்கள். வேறு சிலர், நல்ல மனிதராக வாழ்ந்தால் மட்டுமே போதும் என்று நினைக்கிறார்கள். இவையெல்லாம், தப்பான வரைபடத்தைப் பயன்படுத்தி வழி கண்டுபிடிப்பது போல் இருக்கிறது. அப்படியென்றால், நிறைவான வாழ்க்கையைக் கண்டுபிடிக்க ஒரு நல்ல வரைபடம், அதாவது ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறதா?

நல்ல வழிகாட்டி

பொதுவாக, ஏதாவது ஒரு முடிவு எடுப்பதற்கு முன் வயதில் மூத்தவர்களிடமும் ஞானமாக நடந்துகொள்கிறவர்களிடமும் ஆலோசனை கேட்போம். அதேபோல், நிறைவான வாழ்க்கையைக் கண்டுபிடிக்க மனிதர்களைவிட ரொம்பவே ஞானமுள்ள, வயதில் மூத்த ஒருவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர், நமக்குத் தேவையான ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார். அவை ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகத்தை 3,500 வருஷங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தார்கள். அந்த வேத புத்தகத்தின் பெயர்தான் பைபிள்!

பைபிளை நீங்கள் நம்பலாமா? கண்டிப்பாக! ஏனென்றால், அதன் எழுத்தாளர் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாரையும்விட வயதில் மூத்தவர், ரொம்ப ஞானம் உள்ளவர். அவர் “யுகம் யுகமாக வாழ்கிறவர்,” ‘என்றென்றும் இருக்கிறவர்!’ (தானியேல் 7:9; சங்கீதம் 90:2) அதுமட்டுமல்ல, அவர்தான் ‘உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார். அவரே பூமியை உருவாக்கினார்’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 45:18) அவருடைய பெயர் யெகோவா!—சங்கீதம் 83:18.

மனிதர்களைப் படைத்தவரிடமிருந்து பைபிள் கிடைத்திருப்பதால், அதில் இருக்கிற ஆலோசனைகள் எல்லா காலத்துக்கும் பொருந்தும். அதுமட்டுமல்ல, ஒரு இனத்தைவிட இன்னொரு இனம் உயர்ந்தது என்று அது சொல்வதில்லை. அதனால், எல்லா தேசத்து மக்களுக்கும் அது பிரயோஜனமாக இருக்கும். பைபிள் நிறைய மொழிகளில் கிடைக்கிறது, அதிகமாக விநியோகிக்கப்படுகிறது. * அதனால், யார் வேண்டுமானலும் பைபிளைப் படித்து புரிந்துகொள்ள முடியும், அதிலிருந்து பிரயோஜனமடைய முடியும். இவற்றை வைத்துப் பார்க்கும்போது, கீழே இருக்கிற விஷயமும் உண்மை என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்:

“கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப்போஸ்தலர் 10:34, 35.

ஒரு அன்பான அப்பா-அம்மா தங்கள் பிள்ளைகளுக்கு ஆலோசனைகளைக் கொடுப்பதுபோல் கடவுளான யெகோவாவும் நமக்கு ஆலோசனைகளைக் கொடுக்கிறார். அவற்றை பைபிள் மூலமாகக் கொடுக்கிறார். (2 தீமோத்தேயு 3:16) அதில் அவர் சொல்லியிருப்பதை நாம் நம்பலாம். ஏனென்றால், அவர் நம்மைப் படைத்தவர். நாம் எப்படி வாழ்ந்தால் நன்றாக இருப்போம் என்று அவருக்குத் தெரியும்!

இப்படியொரு வாழ்க்கை கிடைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த கட்டுரை பதில் தரும்.

^ பாரா. 6 பைபிளின் மொழிபெயர்ப்பைப் பற்றியும் விநியோகிப்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள www.dan124.com வெப்சைட்டில் இருக்கிற பைபிள் போதனைகள் > சரித்திரமும் பைபிளும் என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.

^ பாரா. 16 அதிகமாகத் தெரிந்துகொள்ள, காவற்கோபுரம் எண் 2, 2018-ல் பக்கங்கள் 6-9-ஐப் பாருங்கள். இந்தப் பத்திரிகை www.dan124.com வெப்சைட்டில் கிடைக்கும். லைப்ரரி > பத்திரிகைகள் என்ற தலைப்பில் பாருங்கள்.