Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை

எல்லாம் பழக்கதோஷம்!

எல்லாம் பழக்கதோஷம்!
  • ஆஸ்டனுடைய கடிகாரத்தில் அலாரம் அடிக்கிறது... அவர் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் திடுதிப்பென்று படுக்கையைவிட்டு எழுந்து, ராத்திரியே தயாராக வைத்திருந்த உடற்பயிற்சி டிரெஸ்சை போட்டுக்கொண்டு கொஞ்சம் நேரம் ‘ஜாகிங்’ போகிறார். இப்படித்தான் ஒரு வருஷ காலமாக வாரத்துக்கு மூன்று தடவை செய்துவருகிறார்.

  • அப்போதுதான் லோரி தன் கணவனோடு சண்டைபோட்டு முடித்திருந்தாள். கோபமும் விரக்தியும் பொங்க... சமையல் அறைக்குள் தடாலென நுழைகிறாள். சாக்லேட் வைத்திருந்த பையை டபக்கென்று எடுத்து அதிலிருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுகிறாள். எப்போதெல்லாம் ‘அப்செட்’ ஆகிறாளோ அப்போதெல்லாம் இப்படித்தான் செய்வாள்.

இவர்கள் இரண்டு பேருக்கும் என்ன ஒற்றுமை? தெரிந்தோ தெரியாமலோ, இவர்கள் ஒரு பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள், அதுதான் பழக்கதோஷம்.

நீங்கள் எப்படி? ஏதாவது நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்களா? தவறாமல் உடற்பயிற்சி செய்வது... நன்றாகத் தூங்குவது... பிடித்தமானவர்களோடு நெருக்கமான பந்தம் வைத்துக்கொள்வது... இது மாதிரி ஏதாவது இலக்கு வைக்க நீங்கள் விரும்பலாம்.

ஒருவேளை கெட்ட பழக்கம் ஏதாவது இருந்தால், அதாவது சிகரெட் பிடிப்பது... நிறைய நொறுக்குத் தீனி சாப்பிடுவது... இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவிடுவது... போன்ற ஏதாவது பழக்கம் இருந்தால், அதை ஒழித்துக்கட்ட வேண்டுமென நீங்கள் நினைக்கலாம்.

உண்மைதான், கெட்ட பழக்கத்தை விட்டுவிடுவது அவ்வளவு சுலபமல்ல. குளிர் காலத்தில் கம்பளியைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டால் எழும்பவே இஷ்டம் இருக்காது. அது மாதிரிதான் கெட்ட பழக்கமும்... ஆரம்பித்த பிறகு அதை விட்டுவிடுவது ரொம்ப கஷ்டம்!

அப்படியானால், உங்களுடைய பழக்கங்களை எப்படிக் கட்டுப்படுத்தலாம்? அவை உங்களுக்குக் கெடுதல் செய்வதற்கு பதிலாக நல்லது செய்ய வேண்டுமென்றால் என்ன செய்யலாம்? பைபிள் தரும் அருமையான மூன்று ஆலோசனைகளைச் சிந்தித்துப் பாருங்கள். (g16-E No. 4)