பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?

நாம் ஏன் கஷ்டப்படுகிறோம், சாகும்போது என்ன நடக்கிறது, குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ள தயாரிக்கப்பட்ட புத்தகம்தான் இது.

இதுதான் கடவுளுடைய நோக்கமா?

உலகத்தில ஏன் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? சீக்கிரத்தில் எல்லாம் மாறப்போகிறது என்று பைபிள் சொல்கிறது. அப்போது நீங்கள் சந்தோஷமாக வாழலாம்.

அதிகாரம் 1

கடவுளைப் பற்றிய உண்மைகள் யாவை?

உங்கள் மேல் கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா? கடவுள் எப்படிப்பட்டவர்? கடவுளோடு நண்பராக என்ன செய்ய வேண்டும்? இதற்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 2

பைபிள்—கடவுள் தந்த புத்தகம்

வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை சமாளிக்க பைபிள் எப்படி உதவும்? பைபிளில் இருக்கும் தீர்க்கதரிசனங்களை நாம் எப்படி நம்புவது?

அதிகாரம் 3

பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?

இந்த பூமி பூஞ்சோலையாக மாற வேண்டும் என்ற கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவாரா? எப்போது?

அதிகாரம் 4

இயேசு கிறிஸ்து யார்?

கடவுள் வாக்கு கொடுத்திருந்த மேசியா இயேசுதான் என்று எப்படிச் சொல்லலாம்? இயேசு எங்கிருந்து வந்தார்? அவரை ஏன் கடவுளுடைய ஒரே மகன் என்று சொல்கிறோம்? படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 5

மீட்கும்பொருள் — கடவுள் தந்த மாபெரும் பரிசு

மீட்கும் பொருள் என்றால் என்ன? அதிலிருந்து நீங்கள் எப்படி நன்மை அடையலாம்?

அதிகாரம் 6

இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மனிதர்கள் ஏன் சாகிறார்கள் என்று பைபளிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 7

இறந்துபோன பிரியமானவர்களுக்கு ஒரு நிஜ எதிர்பார்ப்பு

உங்கள் சொந்தக்காரர்கள் யாராவது இறந்துவிட்டார்களா? அவர்களை திரும்ப உயிரோடு பார்க்க முடியுமா? உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறகு என்று படித்து பாருங்கள்.

அதிகாரம் 8

கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?

பரமண்டல ஜெபம் அல்லது கர்த்தருடைய ஜெபம் என்றால் நிறைய பேருக்கு தெரியும். “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஏன் கேட்க வேண்டும்? அதன் அர்த்தம் என்ன?

அதிகாரம் 9

நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

பைபிள் சொல்லியிருப்பதுபோல், கடைசி நாட்கள் என்பதற்கு அடையாளமாக நம் நாளில் நடக்கும் சம்பவங்களையும் மக்களின் குணங்களையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 10

ஆவி சிருஷ்டிகள்—நம்மீது அவற்றின் செல்வாக்கு

நல்ல தேவதூதர்களை பற்றியும் கெட்ட தேவதூதர்களைப் பற்றியும் பைபிளில் இருக்கிறது. அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா? இவர்களால் நமக்கு என்ன நன்மை அல்லது ஆபத்து?

அதிகாரம் 11

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

உலகத்தில் இருக்கும் கஷ்டங்களுக்கு எல்லாம் கடவுள்தான் காரணம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் ஏன் கஷ்டப்படுகிறோம் என்று கடவுளே காரணத்தை விளக்குகிறார். அதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 12

கடவுளுக்குப் பிரியமாக வாழ்தல்

நம்மால் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழ முடியும். அப்படி வாழ்ந்தால் அவருடைய நண்பராக முடியும்.

அதிகாரம் 13

உயிரைக் கடவுளுடைய கண்ணோட்டத்தில் பாருங்கள்

கருக்கலைப்பு, இரத்தம் ஏற்றுதல், மிருகங்களின் உயிரை பற்றியெல்லாம் கடவுள் எப்படி நினைக்கிறார்?

அதிகாரம் 14

சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு வழி

கணவன், மனைவி, அப்பா-அம்மா, பிள்ளைகள் எல்லாம் எப்படி அன்பு காட்ட வேண்டும் என்று இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். நாம் எப்படி இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்?

அதிகாரம் 15

கடவுள் ஏற்றுக்கொள்கிற வணக்கம்

உண்மை மதத்தை கண்டுபிடிக்க உதவும் 6 விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 16

மெய் வணக்கத்தின் பக்கம் உறுதியாக நில்லுங்கள்

நீங்கள் நம்பும் விஷயங்களை பற்றி மற்றவர்களிடம் சொல்வது ஏன் கஷ்டமாக இருக்காலம்? அவர்கள் மனதை காயப்படுத்தாமல் எப்படி பேசலாம்?

அதிகாரம் 17

ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

நீங்கள் செய்யும் ஜெபத்தை கடவுள் கேட்கிறாரா? இதற்கு பதில் தெரிந்துகொள்ள ஜெபத்தை பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

அதிகாரம் 18

முழுக்காட்டுதலும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும்

ஞானஸ்நானம் எடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும், ஞானஸ்நானம் எப்படி கொடுக்கப்படும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 19

கடவுளுடைய அன்பிலே நிலைத்திருங்கள்

கடவுள் நமக்காக செய்த எல்லா விஷயங்களுக்கும் நாம் எப்படி நன்றி காட்டலாம்? நாம் எப்படி அவர்மீது அன்பு காட்டலாம்?

பிற்சேர்க்கை

கடவுளுடைய பெயர் — அதன் பயன்பாடும் அர்த்தமும்

நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் நீக்கப்பட்டுவிட்டது. ஏன்? கடவுளுடைய பெயரை பயன்படுத்துவது முக்கியமா?

பிற்சேர்க்கை

மேசியாவின் வருகையை தானியேல் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிற விதம்

மேசியா எப்போது வருவார் 500 வருடங்களுக்கு முன்பே கடவுள் சொல்லிவிட்டார். இந்த முக்கியமான தீர்க்கதரிசனத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பிற்சேர்க்கை

இயேசு கிறிஸ்து—வாக்குப்பண்ணப்பட்ட மேசியா

மேசியாவை பற்றி பைபிளில் இருக்கும் எல்லா தீர்க்கதரிசனங்களும் இயேசுவில் நிறைவேறியது. இந்த தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கொஞ்சம்கூட மாறாமல் அப்படியே நிறைவேறியதை உங்கள் பைபிளிலிருந்தே படித்து பாருங்கள்.

பிற்சேர்க்கை

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய உண்மை

திரித்துவ போதனை பைபிளிலிருந்துதான் வந்தது என்று நிறைய பேர் நம்புகிறார்கள். அது உண்மையா?

பிற்சேர்க்கை

வணக்கத்தில் மெய்க் கிறிஸ்தவர்கள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை

இயேசு சிலுவையில்தான் இறந்தாரா? பைபிளில் இருந்தே பதிலை படித்து பாருங்கள்.

பிற்சேர்க்கை

கர்த்தருடைய இராப்போஜனம்—கடவுளைக் கனப்படுத்துகிற ஓர் ஆசரிப்பு

இயேசு இறந்த நாளை வருடா வருடம் நினைத்து பார்க்கும்படி பைபிள் கட்டளையிடுகிறது. இதை எப்போது, எப்படி செய்ய வேண்டும்?

பிற்சேர்க்கை

“ஆத்துமா,” “ஆவி”—உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகின்றன?

மனிதர்கள் சாகும்போது அவர்களுடைய ஆத்துமா மட்டும் பிரிந்து சென்று எங்கேயோ உயிர் வாழ்வதாக நிறைய பேர் நினைக்கிறார்கள். இதை பற்றி கடவுள் தந்த புத்தகமான பைபிள் என்ன சொல்கிறது?

பிற்சேர்க்கை

ஷியோல் மற்றும் ஹேடீஸ் என்றால் என்ன?

ஷியோல், ஹேடீஸ் என்ற வார்த்தைகளை சில பைபிளில் “நரகம்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன?

பிற்சேர்க்கை

நியாயத்தீர்ப்பு நாள்—அது என்ன?

கடவுளுக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளில் கிடைக்கும் ஆசீர்வாதங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பிற்சேர்க்கை

1914—பைபிள் தீர்க்கதரிசனத்தின் முக்கிய வருடம்

1914 முக்கியமான வருடம் என்பதற்கு பைபிளில் என்ன ஆதாரங்கள் இருக்கிறது?

பிற்சேர்க்கை

பிரதான தூதனாகிய மிகாவேல் யார்?

வல்லமையுள்ள பிரதான தூதனை பற்றி பைபிள் சொல்கிறது. அவரைப் பற்றியும் இப்போது அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

பிற்சேர்க்கை

‘மகா பாபிலோனை’ அடையாளம் காணுதல்

“மகா பாபிலோன்” என்ற வேசியை பற்றி வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிறது. இந்த வேசி யாரை குறிக்கிறாள்? நிஜமாகவே ஒரு பெண்ணை குறிக்கிறாளா? இவளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பிற்சேர்க்கை

இயேசு டிசம்பர் மாதத்தில் பிறந்தாரா?

இயேசு பிறந்தபோது பெத்லகேமில் சீதோஷ்ண நிலை எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

பிற்சேர்க்கை

பண்டிகைகளை நாம் கொண்டாட வேண்டுமா?

உங்கள் ஊரில் கொண்டாடப்படும் விடுமுறை நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் எதிலிருந்து வந்தன? பதில் தெரிந்துகொண்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.